என்னென்ன தேவை?
காலிஃப்ளவர் 1/2 கிலோ,
பயத்தம் பருப்பு 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் 1/2 கப்,
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை,
லவங்கப்பட்டை 1 துண்டு,
ஏலக்காய் 3,
கிராம்பு 3,
சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன்,
ரசப்பொடி 1/2 டீஸ்பூன்,
சோயா சாஸ் 1/2 டீஸ்பூன்,
உப்பு சுவைக்கேற்ப,
எண்ணெய் 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி சிறிது.
எப்படிச் செய்வது?
காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து, கழுவி, பூக்களைப் பிரித்து, சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து முக்கால் பதம் வேகவிட்டு வடித்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வெடித்ததும், சாம்பார் பொடி, ரசப்பொடி, சேர்த்து 2 நொடிகள் வதக்கி, பிறகு மசித்து வைத்த பயத்தம்பருப்பு, சோயா சாஸ், வேகவைத்த காலிஃப்ளவர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து, சப்பாத்தி, பூரி அல்லது புரோட்டாவுடன் பரிமாறவும்.