28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
chinese mutton chops
அசைவ வகைகள்

சைனீஸ் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி

சைனீஸ் மட்டன் சாப்ஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சைனீஸ் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பொரிக்க :

ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள் – 6
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க

கிரேவி செய்ய :

வெங்காயம் – 2
குடமிளகாய் – 1
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
சீனி – 1 டீஸ்பூன்

செய்முறை :

* ஒரு வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

* மற்றொரு வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

* கழுவிய மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து கறியில் பிசறி 1 மணி நேரம் ஊறவிடவும்.

* குக்கரில் கலந்து வைத்துள்ள கறியை அந்த மசாலாவுடன் போட்டு வேக வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த கறியை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் குடமிளகாய் போட்டு வதக்கவும்.

* பின்னர் அஜினமோட்டோ, சோயா சாஸ், சீனியை சேர்த்து நன்றாக கிளறவும்.

* அடுத்து பொரித்து வைத்துள்ள சாப்ஸையும் சேர்த்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.

* சுவையான சூப்பரான சைனீஸ் மட்டன் சாப்ஸ் ரெடிchinese mutton chops

Related posts

நண்டு தொக்கு மசாலா

nathan

மஷ்ரூம் ஆம்லெட்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டீப் ஃபிரை எக்

nathan

அவசர பிரியாணி

nathan

சுவையான முட்டை பட்டர் மசாலா

nathan

வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு

nathan

சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

nathan

சுவையான கேரளா சிக்கன் ப்ரை

nathan

சீரக மீன் குழம்பு

nathan