24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
201607261020379767 how to make potato egg gravy SECVPF
அசைவ வகைகள்

உருளைக்கிழங்கு முட்டை கிரேவி செய்வது எப்படி

முட்டையுடன் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு முட்டை கிரேவி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 3
பட்டாணி – 1/2 கப்
முட்டை – 6
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரைக்க :

சிவப்பு மிளகாய் – 5
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை வேக வைத்து தோலுரிக்கவும்.

* பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

* இஞ்சி பூண்டு போஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் உருளைக்கிழங்கு, பட்டாணி சிறிது நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் அதில் முட்டையை இரண்டாக வெட்டி போட்டு அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

* இதன் மேல் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* இதை தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.201607261020379767 how to make potato egg gravy SECVPF

Related posts

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

சூடான சுவையான சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்!

nathan

இறால் பிரியாணி

nathan

சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி

nathan

நாட்டுக்கோழி வறுவல்

nathan

மட்டன் சுக்கா

nathan

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan

திகட்டாமல் தித்திக்கும் சிக்கன் லாலிபாப்!

nathan

சுவையான காஷ்மீரி மட்டன் ரெசிபி

nathan