25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201607231017270366 Tasty Chicken with Mushroom Soup SECVPF
சூப் வகைகள்

சுவையான சிக்கன் வித் மஷ்ரூம் சூப்

சிக்கன், மஷ்ரூம் இரண்டும் சேர்த்து செய்யப்படும் சூப் மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சிக்கன் வித் மஷ்ரூம் சூப்
தேவையான பொருட்கள் :

சிக்கன் – 200 கிராம்
மஷ்ரூம் – 50 கிராம்
இஞ்சி – சிறிய துண்டு
சிவப்பு மிளகாய் – 1
வெங்காயத்தாள் – 2
வினிகர் – 1/2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
சிக்கன் வேக வைத்த நீர் – 5 கப்

செய்முறை :

* சிக்கனை நன்றாக கழுவிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எலும்பில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும்.

* சிக்கன் வேகவைத்த தண்ணீரை தனியாக வைக்கவும்.

* சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

* மஷ்ரூம், இஞ்சி, வெங்காயத்தாள், மிளகாயை முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* சிக்கன் வேக வைத்த நீருடன் சோயாசாஸ், வினிகர், இஞ்சி, உப்பு, மிளகாய் மற்றும் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

* அத்துடன் கரைத்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி, நறுக்கிய மஷ்ரூமையும் போட்டு வேக விடவும்.

* சூப் நன்கு கொதித்து வரும் போது வேக வைத்த சிக்கன் மற்றும் ஸ்பிரிங் ஆனியன் போட்டு சிறு தீயில் வைத்து 8 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.201607231017270366 Tasty Chicken with Mushroom Soup SECVPF

Related posts

ஓட்ஸ் தக்காளி சூப்

nathan

ப்ராக்கோலி சூப்

nathan

வெஜிடேபிள் பாஸ்தா சூப்

nathan

சுவையான சிக்கன் சூப்

nathan

வொண்டர் சூப்

nathan

பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

சத்தான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி

nathan

காலிஃளவர் சூப்

nathan

சைனீஸ் சிக்கன் சூப்

nathan