25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Nd1a0fw
சிற்றுண்டி வகைகள்

பெப்பர் அவல்

தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
முந்திரி – 5
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு :
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 2
செய்முறை:
• முதலில் மிளகை வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
• அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து தனியாக வைக்கவும்.
• முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த பின் அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை போட்டு நன்கு கிளறி விட வேண்டும். தீயை மிதமாக வைக்கவும்.
• கடைசியாக அதில் துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கிளறிஇறக்கினால், பெப்பர் அவல் ரெடி!!! Nd1a0fw

Related posts

உருளைக்கிழங்கு சமோசா

nathan

சுவையான கேழ்வரகு பக்கோடா

nathan

ஆளி விதை இட்லிப் பொடி

nathan

சூப்பரான பீட்ரூட் வடை

nathan

கம்பு தயிர் வடை

nathan

முயன்று பாருங்கள் வெஜ் பீட்சா

nathan

பிரெட் - அவல் சப்பாத்தி

nathan

கேனலோனி ஃப்ளாரன்டைன் (இத்தாலி)

nathan

தூதுவளை மசாலா தோசை

nathan