28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201607190908091484 how to make Szechuan Chicken Noodle SECVPF
அசைவ வகைகள்

செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்

வீட்டிலேயே செஸ்வான் சிக்கன் நூடுல்ஸை எளிய முறையில் செய்யலாம். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் – 1 கப்
பூண்டு – 5
எலும்பில்லாத சிக்கன் – 150 கிராம்
வெங்காயம் – 2
கேரட் – 1
குடைமிளகாய் – 2
அஜினோ மோட்டோ – சிறிது
முட்டை – 2
மிளகு தூள் – 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
வரமிளகாய் விழுது அல்லது சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
சர்க்கரை – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், வெங்காயத்தாள், கேரட், குடைமிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும்.

* நூடுல்ஸை வேக வைத்து வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு சிறிது எண்ணெய் போட்டு பிரட்டி வைக்கவும். இவ்வாறு செய்தால் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

* ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பொடி செய்த பூண்டை போட்டு வதக்கவும்.

* அடுத்து சிக்கனை சேர்த்து மிதமான தனலில் வைத்து, சிக்கன் வேகும் வரை வதக்கவும்.

* பின்னர் வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து, சிறிது அஜினோ மோட்டோ தூவி வதக்கவும்.

* அனைத்தும் வதங்கியதும், காயை ஒதுக்கி நடுவில் குழி செய்து, 1 ஸ்பூன் ஆயில் விட்டு அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்த 2 முட்டையை ஊற்றி பொரிக்கவும்.

* முட்டை வறுபட்டதும் வரமிளகாய் விழுது, தக்காளி சாஸ், சோயா சாஸ், சிறிது சர்க்கரை, சேர்த்து பிரட்டி நூடுல்ஸ், வெங்காயத்தாள் சேர்த்து மசாலா நுடுல்ஸில் நன்றாக பரவும் படி பிரட்டி சூடாக பறிமாறவும்.

* செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ் ரெடி. 201607190908091484 how to make Szechuan Chicken Noodle SECVPF

Related posts

ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல்

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

ஃபிங்கர் சிக்கன்

nathan

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

nathan

நெத்திலி மீன் வறுவல்

nathan

முட்டை குழம்பு

nathan

மட்டர் பன்னீர்

nathan

இறால் பஜ்ஜி

nathan

சில்லி இறால் -கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள்.

nathan