26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
201607180806143357 chocolate scrub smooth skin SECVPF
சரும பராமரிப்பு

சருமம் மிருதுவாக்கும் சாக்லேட் ஸ்க்ரப்

சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். முகப்பரு, வயதாகும் அறிகுறி ஆகியவற்றை மறையச் செய்யும்.

சருமம் மிருதுவாக்கும் சாக்லேட் ஸ்க்ரப்
சாக்லேட் சுவை, ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி அழகிற்கும் அற்புதம் செய்யும். முகப்பரு, வயதாகும் அறிகுறி ஆகியவற்றை மறையச் செய்யும். சருமத்தில் களையே இல்லையே என யோசிப்பவர்களுக்கு ஏற்ற ஸ்க்ரப் இதுதான்.

இந்த சாக்லெட் ஸ்க்ரப் எல்லா சருமத்திற்கும் ஏற்றது. இவற்றில் பாக்டீரியாக்களின் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. இதனால் முகப்பருக்கள் மீது செயல் புரியும். இந்த ஸ்க்ரப் அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவற்றையும் அகற்றிவிடும்.

தேவையான பொருட்கள் :

பொடித்த சர்க்கரை – 1 கப்
நாட்டுச் சர்க்கரை – 1 கப்
புதினா எண்ணெய் – 2 டீஸ்பூன்
கோகோ பவுடர் – 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1 கப்

சர்க்கரை, கோகோ பவுடர், நாட்டுச் சர்க்கரை இவற்றை முதலில் கலந்து, இவற்றில் புதினா மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து, ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள புதினா எண்ணெய் முகப்பருக்களை விரட்டும். கருமையை நீக்கிவிடும். சர்க்கரை சருமத்தை மென்மையாக்கும். கோகோ ஆழமாக சுத்தம் செய்து, இறந்த செல்களை அகற்றும்.

இந்த ஸ்க்ரப் வாரம் மூன்று முறை சிறிது எடுத்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து குளிக்கலாம். கிடைக்கும் பலன் அற்புதமானது. சருமம் மிருதுவாகி, எந்த வித தழும்புகளும் இல்லாமல் மிளிர்வதற்கு இந்த ஸ்க்ரப் உத்திரவாதம்.chocolate scrub smooth skin

Related posts

சருமத்தை மென்மையாக்கும் பழங்கள்

nathan

பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்!…

sangika

உங்கள் சருமம் என்றும் 16 ஆக ஜொலிக்க அவகாடோவை பயன்படுத்தும் வழிகள் தெரியுமா!!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஷேவ்விங் செய்வது பற்றி மக்களின் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள்!

nathan

கைவசம் இந்த மூலிகை எப்போதும் இருந்தா போதும்!! எல்லா உடல் பாதிப்புகளையும் போக்கிடலாம் தெரியுமா?

nathan

எண்ணெய் பசை சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி?

nathan

சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க காரட்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வறண்டு இருக்கும் சருமத்தை சரிசெய்வதற்கான சில வழிகள்!

nathan

குழந்தை போன்ற மென்மையான சருமத்தை பெற சூப்பர் டிப்ஸ்

nathan