26.3 C
Chennai
Saturday, Aug 16, 2025
அலங்காரம்மேக்கப்

பார்ட்டிக்கு போறீங்களா? அப்ப இத படிங்க

hghபார்ட்டிக்கு போறதுக்கு முன்னாடி நம்ம முகத்துக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் பொருந்தும்னு பார்க்கணும். பார்ட்டிக்கு போறப்ப, முன் பக்க முடி கலையாம இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். பார்ட்டிக்கு போகும் போது மிதமான காம்பேக்ட் பவுடர், ஐ லைனர், காஜல், லிப்ஸ்டிக் அவசியம்.

இடத்துக்கும், பார்ட்டிக்கும் ஏத்தபடி, இதையே இன்னும் அதிகமா போட்டுக்கலாம். டிரெடிஷனல் பார்ட்டின்னா பொட்டு வச்சுக்கலாம். வெஸ்டர்ன் பார்ட்டிக்கு தேவையில்லை. நகங்களை அழகா ஷேப் பண்ணி, மேட்ச்சிங் நெயில் பாலீஷ் போடணும்.

அது பிடிக்காதவங்க, நகங்களை சின்னதா வெட்டி, நகங்களோட நிறத்துலயே நெயில் பாலீஷ் போட்டுக் கொள்ளலாம். சேலை கட்டறவங்களா இருந்தா, சேலையை மட்டுமில்லாம, உள் பாவாடையையும் இஸ்திரி செய்துதான் கட்டணும்.

மெல்லிசான மெட்டீரியல்ல, ஃபிஷ் கட் உள் பாவாடைகள், சேலை கட்டறவங்களோட உடம்பை அழகான ஷேப்ல காட்டும். குண்டானவங்களுக்கு மெல்லிசான, சாஃப்ட் சில்க் மற்றும் காட்டன் புடவைகள் அழகா இருக்கும்.

சல்வார் போடறவங்களா இருந்தா, அனார்கலி மாடலை தேர்ந்தெடுக்கலாம். ‘ஹை நெக்’, பேன்ட் அடில நிறைய சுருக்கம், கண்ணாடி மாதிரி துப்பட்டா… இதுதான் இப்ப ஃபேஷன். துப்பட்டாவை கழுத்தோட ஒட்டி போடணும். அதுக்குக் கீழேதான் நகைகள் தெரியணும்.

பெரிய மோதிரம் போடறது இப்ப ரொம்பப் பிரபலம். ஒரு கைல வாட்ச், இன்னொரு கைல வளையல் போடலாம். ரெண்டு கைகளுக்கும் வளையல் போடறது ஹோம்லியான தோற்றத்தைத் தரும். லேசா ஹீல்ஸ் வச்ச செருப்புகள், ஒருத்தரோட தோற்றத்தையே மாத்திக் காட்டும்.

பார்த்துப் பார்த்து டிரெஸ்சையும் மேக்கப்பையும் பண்ணிட்டு, செருப்பு விஷயத்துல அலட்சியம் கூடாது. பார்ட்டிக்குனு தனியா சில செட் ஸ்பெஷல் செருப்புகள் வச்சிருக்கிறது அவசியம். நீளமான கை வச்ச டிரெஸ், டார்க் நிற நெயில் பாலீஷ், பளபள கல் வச்ச நகைகள், மாட்டல், பெரிய பொட்டு… இதெல்லாம் பார்ட்டிக்கு வேண்டவே வேண்டாம்.

Related posts

பயணத்தின் போது கொஞ்சமா மேக்கப் போடுங்க

nathan

கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகை!…

sangika

இன்றைய பெண்கள் விரும்பும் பிராண்டட் நகைகள்

nathan

டாட்டூ டிசைன்

nathan

வீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு

nathan

மணப்பெண் அலங்காரம்..

nathan

எகிப்திய பெண்களின் அழகின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

nathan

தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க இத படிங்க!

sangika

அழகு சாதனங்களுக்கும் எக்ஸ்பைரி இருக்கு

nathan