29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Cirp4kP
சைவம்

தொண்டக்காய பாப்புல பொடி வேப்புடு

என்னென்ன தேவை?

கோவக்காய் – ¼ கிலோ
சீரகம் – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெரிய வெங்காயம் – 1
மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன்
மல்லித்தூள் – ¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
அரைக்க
தேங்காய் – ¼ மூடி
பூண்டு – 4 பல்
கிராம்பு – 2
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் – ¼ டீஸ்பூன்
கொண்டைக்கடலை – 1½ டேபிள்ஸ்பூன்
உப்பு – சிறிதளவு.

எப்படி செய்வது?

வெங்காயத்தை வெட்டிக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். அரைப்பதற்கான பொருட்களை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளுங்கள். கோவக்காயை அடி, நுனியை வெட்டிவிட்டு நீளவாக்கில் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் வாசனை பரவும் வரை கிளறுங்கள். அதில் கோவக்காயைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்குங்கள். பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு கிளறி வேகவிடுங்கள். வெங்காயம் பொன்னிறமானதும், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் போட்டு நன்கு கிளறி மூடி, மேலும் சிறிது நேரம் வேகவிடுங்கள். எல்லாம் நன்கு கலந்து வாசம் பரவியதும் இறக்குங்கள். தொண்டக்காய பாப்புல பொடி வேப்புடு ரெடி. Cirp4kP

Related posts

சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

கேரட் தால்

nathan

சேப்பங்கிழங்கு ப்ரை

nathan

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

nathan

சுவையான சத்தான பன்னீர் சாதம்

nathan

சத்தான பாலக் சப்பாத்தி

nathan

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

nathan

சப்பாத்தி லட்டு

nathan