24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

பிரமாதமான‌ கண்களை பெற‌ 5 சூப்பர் அழகுக் குறிப்புகள் … அதுவும் ஒப்பனை எதுவும் இல்லாமல்!

IMPRESSIVE-Eyesஎப்படி நீங்கள் அழகாக கண்கள் பெறுவது?
உங்களின் கண் இமைகளுக்கு ஒரு மஸ்காராவை பயன்படுத்தி உங்களின் கண்களுக்கு அழகிய தோற்றத்தை கொடுக்கப் போகிறீர்களா? அல்லது உங்கள் கண்களின் மேலும் கீழும் விலை உயர்ந்த ஐலைனர் பயன்படுத்தி ஒரு ஸ்மோக்கி போன்ற தோற்றத்தை கொடுக்க போகிறீர்களா? ஒருவேளை ஒரு க்ரீம் திரவ ஐலைனர் கொண்டு உங்கள கண்களுக்கு பயன்படுத்தி அழகானதாகவும் மற்றும் எந்தவிதமான தடங்களும் இன்றி ஒரு மிகச்சிறந்த தோற்றத்தை குடுக்க முடியுமா?

இது எதுவாக இருந்தாலும் சரி, நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் உங்கள் கண்களை அழகாக காட்டுவதற்கு ரொம்ப அதிகமாக ஒப்பனை செய்ய தேவையில்லை.
இதற்கு நான் என்ன‌ செய்யவது?

கொஞ்சம் பொறுமையும் மற்றும் சில கிரியேட்டிவ் எண்ணங்களும் இருந்தால் போதும். இந்த ஐந்து எளிய குறிப்புகள் உங்கள் கண்களை அழகாக்கும், இந்த‌ அதிசயமான மற்றும் மிகவும் உபயோகமான சிறந்த குறிப்புகள் உங்களுக்காக‌.
1. கண் கீழுள்ள பைகள் மிகவும் கெட்ட விஷயம்:
உங்களின் கண் அழகை கெடுப்பதில், முதன்மையாக உள்ள‌ மோசமான விஷயம் என்ன என்று யோசியுங்கள், உங்களுக்கு தெரியுமா? கண் பைகள்தான். இரண்டாவது மோசமான விஷயம் என்ன?
ஒன்றுமில்லை.
கண் பைகள் உங்கள் கண்களை மிகவும் குறையுள்ளதாக‌ காட்டும்.
உண்மையில் நீங்கள் அழகாகவும், சிறப்பாகவும் தோற்றமளிக்கும் போது, இந்த கண் கீழே உள்ள பைகளானது உங்களின் தோற்றத்திற்கு முதிர்ச்சியை தந்து உங்களின் அழகான தோற்றப் பொலிவை இது கெடுத்து விடுகிறது. இந்த‌ கண் பைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

அவை என்னவென்று கீழே பார்க்கலாம்
மரபியல்
தூக்கம் இன்மை
சில வகையான நோய்கள்
நீர் கோர்த்திருத்தல்
கண் பைகள் ஏற்பட மிகவும் பொதுவான காரணம் தூக்கம் இல்லாமை ஆகும். இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் இதை போக்க வேண்டும் என்றால், இவைகளை நீக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நீர் கோர்த்து இருத்தல் காரணமாக ஏற்படும் கண் பைகளால் உங்களுக்கு ஒரு மந்தமான தோற்றம் ஏற்பட காரணமாக உள்ளது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், காலை மற்றும் இரவு என இரண்டு வேளையும் இரு கண்களின் மேல் குளிர்ந்த தேயிலை பைகள் அல்லது வெள்ளரிகளை வைக்கவும். இவை இந்த வீக்கம் குறைவதற்கு நல்ல வழியில் உதவுகிறது மற்றும் இதனால் இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. இன்னும் ஒன்றை நீங்கள் செய்ய முடியும், உங்கள் கண்களுக்கு தினமும் காலை குளிர்ந்த ஐஸ் நீரில் கழுவவும், இரவு மேலே கூறியவற்றை செய்யவும்.

2. கண் இமைகள்? கண் இமை முடிகளை சுருள் செய் வேண்டுமா? வாவாவாவாவ் !!! 
பாருங்கள் யாருக்காவது கண் இமைகள் இல்லாமல் இருக்கிறதா? இல்லவே இல்லை, பிறந்த குழந்தை முதல் 80 வயது வரை உள்ள அனைவருக்கும் கண் இமைகள் இருப்பது சாதாரணமாக விஷயம்.
என்ன செய்து உங்கள் கண் இமைகளை சுருள் சுருளாக‌ செய்யலாம். கண் இமைகளை சுருள் செய்வதற்கென்றே இன்று சந்தைகளில் பல கடைகளில் ஐலேஷ் கர்லர் என்ற உபகரணம் கிடைக்கிறது, தமிழ் சமையல்.நெற் இது அவ்வளவு விலை அதிகமான பொருள் ஒன்றும் இல்லை.  நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் உபயோகப்படுத்த கூடிய விலையில் இது கிடைக்கிறது. எனவே சீக்கிரம் போய் இதை வாங்கி வாருங்கள், இந்த விலையை ஒன்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். இந்த அழகு சாதனத்தை எப்பொழுது எல்லாம் பயன்படுத்தி கொண்டு நீங்கள் வெளியே செல்லும் போது உங்களின் அழகானது பன்மடங்கு அதிகரித்து காட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

3. புருவங்கள் – நீங்கள் உங்களுடைய புருவங்களின் மீது நம்பிக்கை வையுங்கள்:
உங்களுடைய கண்கள் மட்டும் அழகான தோற்ற‌த்தினை கொடுத்து விடாது, உங்கள் முழு முகத்தின் அழகு பெரும்பாலும் உங்கள் புருவத்தினையே  சார்ந்து உள்ளது. இதில் உள்ள‌ முரண்பாடு என்னவென்றால் நாம் அரிதாகவே புருவ பராமரிப்பை மேற்கொள்வதுதான். உண்மையை சொல்லுங்கள், கடைசியாக எப்பொழுது நீங்கள் கூடுதல் கவன‌த்துடன் கண்ணாடியில் உங்கள் புருவம் பற்றி சிந்தனை செய்தீர்கள் என்று இப்போது சொல்லுங்கள்?

நான் நினைக்கிறேன், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இதை செய்யவில்லை என்று:
நீங்கள் பல வழிகளில் உங்கள் புருவத்தினை அழகு படுத்த முடியும். உங்கள் புருவங்களை அழகுபடுத்த இரண்டு மிக பிரபலமான முறைகள் உள்ளன, அவை த்ரெட்டிங் மற்றொன்று வாக்சிங். இவை மட்டும் உங்கள் கண்களை தோற்றத்தை மேம்படுத்தாது, தமிழ் சமையல்.நெற்

ஆனால் இது உங்கள் முழு முகத்தின் அமைப்பை மாற்றுவதோடு, நீங்கள் பல பேர் இருக்கும் இடத்தில் அழகான மற்றும சிறப்பன முக அமைப்பை பெற இவை உதவுகின்றன.
உங்கள் புருவங்களை பத்திரமாக் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களின் புருவ‌ முடி இருக்கும் இடத்தில் சீரற்ற கோடுகளாகத்தான் இருக்கும்!
4. கிரீம். கண் கிரீம்:
அனைவருக்கும் அவரவர் முக அமைப்பிற்கு ஏற்றவாறு கிரீம் உபயோகப்படுத்த வேண்டும். முடிகளுக்கு கிரீம் உபயோகம் செய்யலாம். தோலிற்கும் கிரீம் உபயோகப்படுத்தலாம். ஆனால் கண் கிரீம் க்கு எதுவென்று உள்ளதோ அதை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இது கண், எப்போதும் இதற்கு எதை பயன்படுத்தினாலும் மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். மேலும் எந்த க்ரீம்கள் உங்கள் கண்களுக்கு அழகு தருகின்றன என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு தெரியாது டிவியில் காட்டும் மற்ற‌ க்ரீம்கள் வேலை செய்கிறதா இல்லையா என்று. ஆனால் கண் கிரீம்கள் நன்கு வேலை செய்கிறது. இதற்கு கண்களை சுற்றியுள்ள‌ தோலை பிரகாசமாக மாற்றும் குணங்கள் உண்டு. வெறும் ஒரு பேக் கண் கிரீம் கொண்டு கண்களுக்கு பயன்படுத்தி பாருங்கள்; உங்களுக்கே உங்கள் கண்கள் மீது காதல் வரும்.
நிச்சயமாக, கண்களுக்கு எப்பொழுதுமே காந்த சக்தி உண்டு.

5. மிதமான நிறங்கள் உபயோகப்படுத்தினால் நல்ல பெரிய கண்களாக தோற்றமளிக்கும்:
கண்கள் சிறிய இருந்தால், இதற்கு செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். இங்கேதான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். உங்கள் கண்களை பெரிதாக காட்ட மிதமான‌ நிறங்களை பயன்படுத்த வேண்டும். அடர்த்தியான‌ நிறங்கள் உங்கள் கண்களை சிறியதாக காட்டும். எனவே எப்போதும் அடர்த்தியான நிறங்களை தள்ளிவிட்டு இலகுவான வண்ணங்களை உபயோகப்படுத்துவது எப்போதும் சிறந்தது. ஒரு எளிய மற்றும் விலை மலிவான கண் லைனர் உண்மையில் மிகப் பெரிய மாற்றத்தினை செய்யும் கட்டாயமாக‌!
ஒரு மனிதன் ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவன் அவளது கண்களை பார்த்து பேச வேண்டும். ஏனெனில் மன‌தில் இருப்பது எப்பொழுதும் ஒரு பெண்ணின் கண்களில் தெரியும், ஆனால் அது என்ன என்று தெரியுமா? நம்மை படைத்த ஆண்டவனுக்கே பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாதாம்!

Related posts

சரும பிரச்சனைகளை தீர்க்க

nathan

வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம்…..

sangika

லெமன் ஃபேஸ் ஸ்க்ரப் எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றது!…

nathan

விஜய் நடித்த பிகில் பட நடிகையின் போட்டோ ஷூட்டை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!

nathan

கொந்தளிக்கும் பக்தர்கள்….கஞ்சா அடித்து சாய் பாபாவின் முகத்தில் புகையை விட்ட மீரா மிதுன்!

nathan

அதிகம் பகிருங்கள்!!!கண் கட்டியை நொடியில் குணப்படுத்தும்உப்பு!!

nathan

முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்க…

nathan

நீங்களே பாருங்க.! குழந்தை பிறக்கும் வீடியோவை பகிர்ந்த நகுலின் மனைவி….

nathan

உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை சீர் செய்து கொள்ளுங்கள்!…

sangika