26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201607131427588121 how to make jeera fish curry SECVPF
அசைவ வகைகள்

சுவையான சீரக மீன் குழம்பு

இந்த சீரக மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சீரக மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:

மீன் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் விழுது – அரை கப்
உ.பருப்பு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

* புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்

* தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

* அத்துடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக மசிந்து தொக்கு பதம் வரும் போது மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.

* அடுத்து அதில் தேங்காய் விழுது, புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

* குழம்பு கொத்திக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீனை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* மீன் வெந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

* புளிப்பு, காரம் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளலாம்.

* சுவையான சீரக மீன் குழம்பு ரெடி.201607131427588121 how to make jeera fish curry SECVPF

Related posts

இறால் வறுவல்

nathan

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan

முட்டை அவியல்

nathan

சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்பு

nathan

சில்லி சிக்கன் கிரேவி

nathan

சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ்

nathan

மொச்சை நெத்திலி மீன் குழம்பு

nathan

மிளகு சிக்கன் குழம்பு

nathan

மீல் மேக்கர் கிரேவி

nathan