23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2cra 14 1463215551
கால்கள் பராமரிப்பு

பாதங்களில் வெடிப்பு காணாமல் போக வேண்டுமா? இதோ அசத்தல் டிப்ஸ்

நமது மொத்த உடல் பாரத்தையும் அந்த சிறிய பாதங்கள்தான் தாங்குகிறது.அதிகப்படியான அழுத்தம் பாதங்களுக்கு ஏற்படும்போது பாதத்தில் இருக்கும் கொழுப்பு படிவங்கள் விரிந்து வெளிவரப் பார்க்கும்.உங்கள் பாதம் வறண்டிருந்தால்,அல்லது பாதம் தெரியும்படி காலணி அணிவதனால் அவை எளிதாக தோலினைப் பிளக்கின்றன.அதுதான் பாதத்தில் வெடிப்பு வர காரணம்.

நீங்கள் சற்று கவனித்தீர்களேயானால், ஷூ மற்றும் கட் ஷூ அணிபவர்களுக்கு வெடிப்புகள் வராது. காரணம் குதிகால்கள் இறுக்கமாக மூடி இருப்பதனால் வெடிப்புகள் ஏற்படாது.

பாதவெடிப்புகள் பெரும்பாலும் பெண்களுக்கு வரும். அதிகப்படியான வெப்பத்திலும், குளிரிலும் வெடிப்புகள் வரலாம். சிலருக்கு பிளவு ஆழமாக சென்று வலியை ஏற்படுத்தும்.இன்னும் சிலருக்கு ரத்தம் வரும். எளிதில் போகக் கூடிய இந்த பாத வெடிப்பிற்கு கடைகளில் வாங்கும் க்ரீம்கள் உடனடி பலன் கொடுத்தாலும், அவை திரும்ப திரும்ப வரும். வீட்டிலேயே இதற்கு தீர்வு காண இந்த கட்டுரை உதவும். கீழே சொல்லியிருக்கும் இரண்டு முறைகளுமே உங்கள் பாதத்தின் வெடிப்புகளுக்கு சிறந்த தீர்வாகும். எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

செய்முறை 1: ரைஸ் வினிகர் அரிசியை பதப்படுத்தி செய்யக்கூடிய வினிகர். இது,பாதங்களில் ஏற்படும் வெடிப்பிற்கு சிறந்த பலனைத் தரும்.கால்களை மிருதுவாக்கும், வெடிப்புகளை நீங்கச் செய்யும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு கிடைத்த ஒருவரப் பிரசாதமாகும். பாதத்தில் இருக்கும் சொரசொரப்பினையும்,கடினத்தன்மையையும் நீக்கி,பஞ்சு போலாக்குகிறது.உப்பு இறந்த செல்களை நீக்குகிறது. பாதத்தின் வெடிப்புகளினுள் தங்கும் கிருமிகளை அழிக்கிறது.தொற்றுக்களை நீக்கும்.

தேவையானவை: ரைஸ் வினிகர் :1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன் உப்பு- 2 டேபிள் ஸ்பூன்

ஒரு டப்பில் பாதங்கள் மூழ்கும் அளவிற்கு,பொறுத்துக் கொள்ளும் சூட்டில்,சுடு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மேலே சொன்ன மூன்றையும் போட்டு கலக்க வேண்டும். பின் அதில் பாதங்களை, 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.பின் வெடிப்புக்கான க்ரீமினை போடவும். இவ்வாறு தினமும் செய்தால், ஒரே வாரத்தில் வெடிப்பு போய் பாதங்கள் அழகாகிவிடும்.

செய்முறை 2: தேவையானவை : சோற்றுக்கற்றாழை தேன் கிளிசரின் பெட்ரோலியம் ஜெல்லி

சோற்றுக்கற்றாழை, தேன் ,கிளிசரின் பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு செய்யும் இந்த ஜெல் மிகச் சிறந்த பலன்களைத் தரும்.

சோற்றுக் கற்றாழை சருமத்திற்கு அற்புதத்தை தரும் மூலிகைச் செடியாகும். தேன் கிருமி நாசினி. பாதங்களின் பிளவு மிக ஆழமாக இருந்தால், கிளிசரின் தவிர வேறெதுவும் இதற்கு தீர்வு தராது.

பெட்ரோலியம் ஜெல்லி வெடிப்பிற்கு மிகச் சிறந்த மருந்தாகும். இது உடனடியாக செயல்படுவதால், வெடிப்புகள் வேகமாக குறையும். இந்த நான்கும் சேர்த்து செய்யும் கலவை பாதங்களில் மேஜிக் செய்யும் என்றால் மிகையாகாது. இதனை வீட்டில் முயன்று பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.

சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன், தேன், கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதனுடன் சிறிது பெட்ரோலியம் ஜெல்லியையும் கலந்து தினமும் இரவில் தேய்க்கவும். மறு நாள் காலையில் காலை ஸ்க்ரப் செய்யவும். இறந்த செல்கள் அகன்று, கால்கள் நாளடைவில் மிருதுவாகும்.

மாதம் ஒரு முறை பார்லரில் பெடிக்யூர் செய்து கொள்வது வெடிப்பு வராமல் தடுக்கும். தினமும் பாதங்களை ஸ்க்ரப் செய்வது மிக முக்கியம் அப்போதுதான் அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மிருதுவாகும். கூடுமானவரை வீட்டினுள் சாக்ஸ் அணிந்து கொள்வது வெடிப்பு வராமல் காக்கும்.

2cra 14 1463215551

Related posts

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை

nathan

வீட்டில் கால் பாதங்களை பராமரிக்க

nathan

கால் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வீட்டு குறிப்புகள்

nathan

பித்த வெடிப்பு மூன்று நாட்களில் மறைய

nathan

மெத்தென்ற பாதங்கள் கிடைக்க என்ன வழி?இதோ டிப்ஸ்

nathan

பாதங்களை மிருதுவாக்கனுமா? கருமையான வெடிப்புள்ள பாதங்களை காக்க இதோ டிப்ஸ் :

nathan

கால்களை பராமரிப்பது எப்படி? –அழகு குறிப்புகள்.,

nathan

அழகை கெடுக்கும் பாத வெடிப்பை தீர்க்கும் இயற்கை வழிமுறை

nathan

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்

nathan