25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1467869528 9687
சரும பராமரிப்பு

இளமையுடனும், அழகுடனும் இருக்க வேண்டும் எனில் நெல்லிகாய் சாப்பிடுங்க…

நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது.

ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது.

* முழு நெல்லிக்காயாகவோ அல்லது சாறாக மற்றும் பொடியாகவும் பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும்.

* நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.

* உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

* நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, நரை முடி பிரச்சனை, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம். அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும்.

* நமக்கு இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.

* நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும்.1467869528 9687

Related posts

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்….

nathan

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

nathan

அழகு

nathan

அழகைக் கெடுக்கும் தழும்புகள் மறைய வீட்டிலேயே இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!!

nathan

உங்கள் பிள்ளைக்கு நீங்கள்தான் பியூட்டிஷியன்!

nathan

உங்களுக்கு தெரியுமா தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன…?

nathan

சருமத்தை அழகுபடுத்த அரிசி கழுவிய தண்ணீர்

nathan

கறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்!!!

nathan