26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF %E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
சைவம்

குதிரைவாலி எள் சாதம்

தேவையான பொருட்கள் :
குதிரைவாலி சாதம் – ஒரு கப்
வறுத்து அரைக்க:
கறுப்பு எள் – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு,
கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
• எள்ளைத் தண்ணீர் விட்டுக் நன்றாக கழுவி கல் இல்லாமல் களைந்து வடிகட்டி, தண்ணீர் இல்லாமல் வையுங்கள்.
• வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானதும் எள்ளைப் போட்டு வறுத்தெடுங்கள். அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயத்தை வறுத்தெடுங்கள்.
• ஆறியதும் மிக்சியில் எள்ளைத் தவிர மற்ற பொருட்களை அரைத்து, கடைசியாக எள்ளைப் போட்டு அரையுங்கள்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்து, அதை குதிரைவாலி சாதத்துடன் சேர்த்துக் கிளறுங்கள்.
• வறுத்து அரைத்த பொடியையும் தேவையான அளவு சாதத்துடன் கலந்தால் சுவையான குதிரைவாலி அரிசி எள் சாதம் தயார்.%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF %E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

Related posts

வறுத்தரைத்த காளான் குழம்பு

nathan

சிம்பிளான… பன்னீர் குருமா

nathan

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

nathan

சுவையான வெங்காயம் தக்காளி குழம்பு

nathan

மீல் மேக்கர் – பட்டாணி குருமா செய்வது எப்படி

nathan

சுவையான பச்சை பயறு மசாலா

nathan

குடமிளகாய் சாதம்

nathan

குடைமிளகாய் சாதம்

nathan

வாழைக்காய் பொடிக்கறி

nathan