23.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
o1tniwS
சிற்றுண்டி வகைகள்

ரவா நிம்மபண்டு புளிஹோரா

என்னென்ன தேவை?

அரிசி ரவா – 2 கப்,
எழுமிச்சம்பழம் (பெரிய சைஸ்) – 2,
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்,
கடுகு – ¾ டீஸ்பூன்,
சீரகம் – ¾ டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி – 1 துண்டு,
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
வெல்லம் – ¼ டீஸ்பூன்,
நிலக்கடலை – 1 பிடி,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
முந்திரி – தேவையான அளவு.

எப்படி செய்வது?

பச்சை மிளகாயை நீளவாக்கிலும், இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். எழுமிச்சம்பழத்தைப் பிழிந்து, விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து, மூன்றரை கப் தண்ணீர் விட்டு அரை டீஸ்பூன் உப்பு, ¼ டீஸ் பூன் மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வையுங்கள். கொதித்ததும், ரவாவைப் போட்டு மென்மையாகும் வரை வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் காய்ந்த மிளகாய், சீரகம், கடலைப் பருப்பு, உளுந்தைப் போட்டு பருப்பு வகைகள் சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு, அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள், வெல்லத்தைச் சேர்த்து கிளறுங்கள். இதில் வேகவைத்து வைத்துள்ள ரவாவையும், எழுமிச்சைச் சாறையும் சேர்த்து நன்கு கிளறி, உப்பு, புளிப்பை சரிபார்த்து, நிலக்கடலை, முந்திரியைப் போட்டு கிளறி இறக்குங்கள். 1 மணி நேரம் வைத்து நன்கு சார்ந்ததும் பரிமாறுங்கள். o1tniwS

Related posts

புளி அவல் செய்வது எப்படி

nathan

சத்தான எள்ளு துவையல் செய்வது எப்படி

nathan

ரவா இனிப்பு பணியாரம் சமைப்பது எப்படி..?

nathan

சுவையான சத்தான கேழ்வரகு – புதினா அடை

nathan

ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

nathan

வெள்ளரி அல்வா

nathan

தேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா?

nathan

சுவையான வடைகறி ரெசிபி செய்வது எப்படி

nathan