22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
01 1443685458 karaikudinandumasala
அசைவ வகைகள்

காரைக்குடி நண்டு மசாலா

நண்டு மசாலா ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொருவிதமாக சமைக்கப்படும். ஆனால் காரைக்குடி நண்டு மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அதில் புளி மற்றும் முந்திரி சேர்த்து அரைத்த மசாலாவை கலந்து சமைப்பது தான். இதனால் இந்த நண்டு மசாலா மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

மேலும் இந்த காரைக்குடி நண்டு மசாலாவை சாதம் மட்டுமின்றி, தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடனும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த காரைக்குடி நண்டு மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
01 1443685458 karaikudinandumasala
தேவையான பொருட்கள்: நண்டு – 1 கிலோ புளிக்கரைசல் – 1 கப் பட்டை – 2 பிரியாணி இலை -2 சோம்பு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

துருவிய தேங்காய் – 1 கப் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கசகசா – 1 டேபிள் ஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் முந்திரி – 3 எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நண்டு சேர்த்து, பின் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் நன்கு வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் நண்டு ஓரளவு வெந்திருக்கும். பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி நண்டு மசாலா ரெடி!!!

Related posts

சுவையான… முட்டை தொக்கு

nathan

வஞ்சரம் மீன் குழம்பு

nathan

காரசாரமான இறால் மசாலா

nathan

தந்தூரி சிக்கன்

nathan

சைடிஷ் நண்டு பொடிமாஸ்

nathan

Chettinad chicken kulambu in tamil |செட்டிநாடு சிக்கன் குழம்பு |deepstamilkitchen

nathan

நண்டு பிரியாணி.! செய்வது எப்படி.!

nathan

கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு

nathan

சீரக மீன் குழம்பு

nathan