28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
scalp 1cover 10 1462857926
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா?

எல்லாருக்கும் அழகான நீண்ட கூந்தலுக்கு ஆசை இல்லாமல் இருக்காது. ஆனால் சுகாதரமில்லாத சுற்றுப்புறத்தினாலும், கூந்தலுக்கு சரியான ஊட்டம் இல்லாததாலும், நம் கூந்தல் பாதிக்கபடுகின்றன. கூந்தல் நுனி பிளவு பட்டு, உதிர்ந்து போஷாக்கில்லாமல் டல்லடிக்கின்றன.

மார்கெட்டுகளில் நம் கூந்தலை குறி வைத்து எத்தனையோ ஷாம்புக்கள் எண்ணெய்கள் வந்தாலும் , கூந்தல் வளர்ச்சிக்கு , நம் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை அடிச்சுக்க முடியாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இவற்றால் பக்க விளைவுகள் இல்லை.

இவற்றில் பலன்கள் ரசாயனம் கலந்து விற்கும் எண்ணெய்,ஷாம்புக்களை விட அதிகம். ஆகவே வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே உங்கள் கூந்தலை பொலிவாகுங்கள்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் : ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் ஆகிய இந்த இரு பொருட்களும் கூந்தல் பராமரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆலிவ் எண்ணெய் பாதிக்கப்பட்ட கூந்தலினை சரி செய்கிறது. நுனி பிளவு மற்றும் வறட்சியை போக்குகிறது.

தேன் , ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. பொடுகினைப் போக்கி, வேர்க்கால்களுக்கு போஷாக்கினைத் தருகிறது.

இப்படி மகத்துவம் வாய்ந்த இந்த இரு பொருட்களையும் சேர்த்தால் , உங்கள் கூந்தல் ஜொலிக்காமல் என்ன செய்யும். உபயோகித்துப் பாருங்கள்.பின் உணர்வீர்கள்.

எவ்வாறு தலையில் உபயோகப்படுத்தலாம்? ஒரு கப் ஆலிவ் எண்ணெயில், அரைக் கப் தேன் சேர்த்து ,நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.அதனை லேசாக சூடு செய்து கொள்ளுங்கள். முதலில் கூந்தலை நன்றாக நீரில் கழுவிக்கொள்ளுங்கள். பிறகு லேசாக ஈரம் இருக்கும்படி காய வைத்து ,அதன் பின் இந்த எண்ணெய்க் கலவையை தலையின் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை தடவி மசாஜ் செய்யுங்கள். 30 நிமிடங்கள் பிறகு கூந்தலை நன்றாக எண்ணெய் போகும்படி அலாசுங்கள்.

இன்னும் அருமையான ரிசல்ட் கிடைக்க, கூந்தலில் இந்த கலவையை போட்டபின், ஒரு வெதுவெதுப்பான ஈர டர்க்கி துண்டில் தலைமுழுவதும் கட்டிவிடவேண்டும். இதனால் கூந்தலுக்கு நல்ல ஈரத்தன்மை கொடுத்து, அங்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தலை இன்னும் வளரச் செய்யும்.

இந்த இரு கலவைகளும், கூந்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் போக்குகிறது. போஷாக்கு அளித்து, பொடுகு,அரிப்பு ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறது. நுனி பிளவுதான் கூந்தல் உதிர்வதற்கு காரணம். இதற்கும் இந்த கலவை தீர்வு தருகிறது.

இந்த கலவையை 15 நாட்களுக்கு அல்லது மாதம் மூன்று முறை போடலாம். அப்புறம் பாருங்கள்.எல்லாரும் பொறாமைப்படும்படி , தங்கு தடையில்லாம் உங்கள் கூந்தல் வளரும்.நீங்களும் விதவிதமாய் ஹேர் ஸ்டைல் போட்டு அழகுக்கு அழகு சேர்க்கலாம்.

scalp 1cover 10 1462857926

Related posts

தலைமுடி உதிர்கின்றதா? இதோ இயற்கை வைத்திய முறைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க தலை முடி அடிக்கடி பிளவு ஏற்பட்டு உதிர்கிறதா?

nathan

சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?

nathan

இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க

nathan

உங்களுக்கு சுருட்டை முடியா? இந்த மாஸ்க் போடுங்க…

nathan

மென்மையானக் கூந்தலைப் பெற

nathan

முடிப்பிளவுகளை தடுக்கும் வழிகள்

nathan

தலைமுடியில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? சில நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்கள்!

nathan

மோசமான கூந்தல் அமைப்பா? முடி உதிர்தலா? மயோனைஸ் ரெசிபி ட்ரைபண்ணுங்க!!

nathan