27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
superpic
சரும பராமரிப்பு

குழந்தையை போன்ற மிருதுவான சருமம் பெறவேண்டுமா…..?

மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. எல்லாருக்கும் இது வாய்ப்பதில்லை. 25 வயதிற்கு பிறகு சருமம் கடினமாகிவிடும். இது அவரவர் மரபு சார்ந்து அமைவது.

ஆனால் அப்படி சருமம் தடித்து அழகை குறைப்பது பற்றி கவலைப் படவேண்டாம். நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும். அது உங்கள் கையில் உள்ளது.

சருமத்தை க்ரீம்கள் போட்டு, மென்மையாக்க முயலாதீர்கள். அவை நல்ல விளைவுகளை தருபவை அல்ல. உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு உங்கலை தேவதையாக மாற்ற முயற்சிக்கலாம் வாருங்கள்.

தேன்+ரோஸ் வாட்டர் :
இர்ண்டுமே ஈரப்பதத்தை சருமத்திற்கு அளிக்கும். சுருக்கங்களை போக்கும். கடினத்தன்மையை தரும் இறந்த செல்கள் அடியோடு நீக்கப்படும். சருமத்திற்கு நிறம் அளிக்கும். இரண்டையும் சம அள்வு எடுத்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். தினமும் செய்தால், சருமம் மென்மையாகிவிடும்.

அவகாடோ + யோகார்ட்
அவகாடோவின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடல் யோகர்ட் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்விரண்டிலும் விட்டமின் ஈ உள்ளது. சருமத்தில் சுருக்கங்களை போக்கும். மென்மையாக சருமத்தை வைத்திடும். வாரம் 3 முறை செய்யலாம்.

வாழைப்பழம் + யோகார்ட் + தேன் :
இந்த மூன்றுமே சருமத்தில் அழகினை கொண்டு வந்து சேர்க்கும் கலையை பெற்றிருக்கின்றன. மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். குழந்தையின் சருமத்தை அப்போதே உணர்வீர்கள்.

வாழைப்பழம் + பால் :
வாழைப்பழம் கொலாஜன் உற்பத்தியை சருமத்தில் தூண்டும். இவை சருமத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, மென்மையாக்கிவிடுகிறது. சருமம் பூசியது போல் காண்பிக்கும்.

பப்பாளிப் பழம் :
பப்பாளிப்பழத்தில் விட்டமின் ஏ, சி மற்றும் ஃபைடோ நியூட்ரியன்ஸ் உள்ளது. இது சருமத்தின் பாதிப்புகளை சரிபடுத்துகிறது. முதுமை அடைவதை தள்ளிப்போடச் செய்யும். பப்பாளிப்பழத்தின் சதைப்பகுதியை மசித்து, சருமத்தில் போடவும் 5 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். மிக மென்மையான சருமத்தை பெறுவீர்கள்.
superpic

Related posts

ஆட்டின் பால் சோப்பு பயன்கள் – goat milk soap benefits in tamil

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நெயில் பாலிஷ் ஏற்படுத்தும் விபரீதம் என்னென்ன தெரியுமா?

nathan

இயற்கையான முறையையில் கரும்புள்ளிகளை போக்க……

sangika

கோடையில் சரும பாதுகாப்பு

nathan

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக அற்புதமான எளிய தீர்வு….

nathan

கரும்புள்ளிகள் போய்விட பாட்டி வைத்தியங்கள்

nathan

அழகு குறிப்பு

nathan

சன்ஸ்க்ரீன் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை

nathan

சருமத்தை ஈரப்பதமாக்கி, எப்பொழுதும் ஜொலிக்க வைக்க… இந்த “ஆயில்” பண்ணா போதும்!

nathan