33.2 C
Chennai
Friday, Aug 15, 2025
sl3646
இனிப்பு வகைகள்

சாக்லெட் மான்ட் ப்ளாங்க் (ஃபிரான்ஸ்- ஜெர்மனி)

என்னென்ன தேவை?

பேஸ்ட்ரிக்கு…

மைதா – 50 கிராம்,
உப்பு சேர்க்காத வெண்ணெய் – 50 கிராம்,
முட்டை – 3,
தண்ணீர் – 100 மி.லி.

ஃபில்லிங்குக்கு…

ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்.
சாக்லெட் ட்ரஃபிளுக்கு… 1/2 கப் க்ரீமை சூடாக்கி,
100 கிராம் உடைத்த சாக்லெட் பார் சேர்த்து உருக வைக்கவும்.

எப்படிச் செய்வது?

ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர், வெண்ணெய் சேர்த்துக் கொதிக்க விடவும். இத்துடன் மைதாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். முட்டையை நன்றாக அடித்து, வெண்ணெய்-மைதா கலவையுடன் சேர்த்து அடிக்கவும். கலவையின் சூடு ஆறுவதற்குள் முட்டையைக் கலக்க வேண்டும். பைப்பிங் பேக்கில் (Piping bag) வைத்து, ஒரு வெண்ணெய் தடவி மைதா தூவிய தட்டில் 1 இஞ்ச் நீளத்துக்கு இடைவெளி விட்டுப் பைப் செய்து 180°C வெப்பத்தில் பேக் செய்யவும்.

.ஃபில்லிங்…

பேக் செய்த சாக்லெட் பேஸ்ட்ரிகளை ஆற வைத்து, க்ரீமை உள்ளே அடைக்கவும். பின் இவற்றை ஃப்ரீஸரில் வைத்து, நன்றாக செட் செய்த பின், சாக்லெட் ட்ரஃபிளை மேலே ஊற்றி அலங்கரிக்கவும். தட்டின் மேல் வைக்கும் போது, ஒரு மலை போல் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.sl3646

Related posts

முப்பால் கருப்பட்டி அல்வா

nathan

மைசூர் பாகு செய்ய.!!

nathan

சுவையான பால்கோவா…!

nathan

பாலக்கீரை குழிப்பணியாரம் செய்வது எப்படி

nathan

சுவையான பாதாம் அல்வா

nathan

புதுவருடபிறப்பு ஸ்பெஷல் கச்சான் அல்வா செய்முறை விளக்கம்

nathan

சுரைக்காய் இனிப்பு போளி

nathan

பறங்கிக்காய் வெல்ல அல்வா : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான ரவா கேசரி

nathan