22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
mesmerizing Ruby Gem Jewelry
ஃபேஷன்

மனதை மயக்கும் மாணிக்க ரூபி கல்பதித்த நகைகள்

பழங்காலத்தில் ரூபி என்ற மாணிக்க கற்கள் நவரத்தின கற்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

மனதை மயக்கும் மாணிக்க ரூபி கல்பதித்த நகைகள்
பழங்காலத்தில் ரூபி என்ற மாணிக்க கற்கள் நவரத்தின கற்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனின் அம்சமாக கருதப்படும் ரத்தினக்கல். மாணிக்க ஒருமைப்பாடு, பக்தி, மகிழ்ச்சி, தைரியம், காதல் பெருந்தன்மை, செழிப்பு என்பதன் அம்சமாக விளங்குவதாக கூறப்படுகிறது.

அந்த காலத்தில் போர் வீரர்கள் தங்கள் சருமத்தில் படும்படியாக மாணிக்க கற்களை பதித்து கொண்டே போரிட சென்று உள்ளனர்.

ரூபி கற்கள் பதித்த நகைகள் இருநபருக்கிடையே அதிக அன்பும் உணர்வும் பகிர உதவக்கூடியவையாக உள்ளது. இதன் காரணமாய் நிச்சயதார்த்தம் மற்றும் காதலர் தின கொண்டாட்டத்தில் ரூபி பதித்த நகைகள் கூடுதல் மகிழ்ச்சியை தருகின்றன. உடல் ரீதியாக மாணிக்கக்கல் என்பதை அணிந்தால் இதய சக்கரங்களை சீராக செயல்பட செய்து நல்ல உத்வேகத்துடன் பணிபுரிய செய்யும். இதயத்தின் நண்பனாக மாணிக்கற்கள் இதயங்கள் இணைய அணிகலங்களாக உதவிபுரிகின்றன எனலாம்.

மாணிக்க தனித்தன்மையும் சிறப்பம்சமும் :

பூமியில் தோண்டி எடுக்கக்கூடிய மாணிக்க இளஞ்சிவப்பு மற்றும் முழு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. ஒளி ஊடுருவ கூடியது மற்றும் ஒலி ஊடுருவ இயலாதது என்ற இருவகையில் கிடைக்கும் மாணிக்கம், வைரத்திற்கு அடுத்தபடியான கடின தன்மை கொண்டது

கிடைப்பது மிக அரிதான என்பதால் இதன் விலையை எளிதில் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அதனால் தாம் விலைமதிப்பில்லாத மாணிக்கம் என்கின்றர்.

மாணிக்க மோதிரங்கள்கல் உடலில் படும்படியே அணிதல் வேண்டும். சிம்ம ராசியில் பிறந்தவர்கள், ஜூலை மாதம் பிறந்தவர்கள், பிறந்த தேதியும், கூட்டு தொகையும் ஓன்றாம் எண்ணில் இருப்பவர்கள் மாணிக்ககல் அணியலாம்.

விலை அதிகமாக உள்ள மாணிக்க கல் அணிய முடியாத போது கார்னட் என்ற அருஞ்சிவப்பு கற்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதே பலன் கிடைக்கும்.

ரூபி கல் பதித்த டிசைனர் நகைகள் :

ரூபி என்று மாணிக்க சிகப்பு நிற கற்கள் பதித்த அழகிய பென்டன்ட், காதணி, நெக்லஸ்கள், மோதிரம், வளையல் போன்றவை விதவிதமான டிசைன்களில் வருகின்றன. மஞ்சள் தங்கத்தின் சிகப்பு நிற மாணிக்கல் பொருந்திய வகை மங்கலகரமாக இருப்பதுடன் கூடுதல் பொலிவையும் அழகையும் தருகின்றன.

நவநாகரிக வடிவமைப்புக்கு ஏற்ற பூ தோரணம், கொடியுடன் கூடிய இலை பூக்கள் என்ற வகையிலான மரகத பச்சை மற்றும் ரூபி கற்கள் பதித்த நெக்லஸ் செட் நகைகள் கண்ணை கவர்கின்றன. கல் நகைகளிலேயே மாணிக்க சிகப்பு கல் பதியப்பட்ட நகைகள் பார்க்க பரவசமாய் அணிய அற்புதமாய் திகழும் நகைகளாய் உள்ளன. எந்த நிற ஆடைக்கும் ஏற்ற வண்ண நகைகளாய் திகழ்கின்றது.mesmerizing Ruby Gem Jewelry

Related posts

முகங்களிற்கு ஏற்ற பொட்டு

nathan

சூப்பர் டிப்ஸ் ப்ரேட் டெனிம் ஜீன்ஸை நாமே உருவாக்கலாம்

nathan

பெண்களின் மாறிவரும் ‘பேஷன்’ உலகம்

nathan

லக லக லெக்கிங்ஸ்!

nathan

வசீகரிக்கும் வைரம்!

nathan

மோதிர விரலில் உள்ள சுவாரசியம் என்ன? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள்…!

nathan

‛புடவை எப்பவும் பெஸ்ட் சாய்ஸ்!’ – ராதிகாவின் ஸ்டைல் சீக்ரெட்

nathan

மோதிரங்கள் அணிவதில் சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?…

sangika

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க.

nathan