இது சவுதி அரேபியா மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவு. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ரம்ஜான் ஸ்பெஷல்: கப்ஸா சோறு
தேவையான பொருட்கள் :
முழு கோழி – 1
அரிசி – அரை கிலோ (2 1/2 ஆழாக்கு)
எண்ணெய் – 50 மில்லி
பட்டை ஒரு விரல் நீளம் – இரண்டு
ஏலக்காய் – மூன்று
கிராம்பு – நான்கு
வெங்காயம் – மூன்று
தக்காளி – மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டர் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* முழு கோழியை சுத்தம் செய்யவும்.
* அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
* அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என்றால் 3 3/4 அளவு வரும். நான்கு டம்ளராக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை முழுவதுமாக அப்படியே போட்டு வேக விடவும்.
* வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும், கோழியை தனியாகவும் வைக்கவும்.
* சட்டியை காயவைத்து அதில் எண்ணெய், பட்டரை ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள கோழி தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
* கொதிவந்ததும் அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வேக வைத்துள்ள கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
* இது தான் அரேபியர்களின் கப்ஸா சோறு.
குறிப்பு
இது சவுதி அரேபியா மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவு. அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். பிரியாணிக்கு கூட மசாலா அவ்வளவாக இருக்காது. கோழியோ கறியை முழுசாக சட்டியில் போட்டுத் தான் வேக விடுவார்கள். சிலருக்கு கோழியை முழுசாக போட பிடிக்கவில்லையென்றால் துண்டுகளாக போட்டும் செய்யலாம்.