chickenvada
சிற்றுண்டி வகைகள்

Super சிக்கன் வடை : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள்

கோழி – கால் கிலோ
முட்டை – 1
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 6
இஞ்சி – ஒரு அங்குலம்
வெ.பூண்டு – 10 பல்
தேங்காய் பூ – 1 1/2 கப்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – கால் கப்
உப்பு – ஒரு டீஸ்பூன்
கறி மசாலா – ஒரு டீஸ்பூன்

செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் சீவிவிட்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதை போல பூண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு நைசாக விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் விழுதை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

பிறகு அதனுடன் இஞ்சி விழுது, வெ.பூண்டு விழுது, கறி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை போடவும்.

அதன் பின்னர் இவற்றுடன் நறுக்கின கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் விழுதையும் சேர்க்கவும்.

அரைத்த சிக்கன் விழுதுடன் எல்லாவற்றையும் சேர்த்த பிறகு ஒன்றாக கலந்து வடை மா பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை சிறிய எலுமிச்சை அளவு எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு 2 நிமிடங்கள் வேக விடவும். அடுப்பை குறைத்து மிதமான தீயில் வைத்து செய்யவும்.

2 நிமிடங்கள் கழித்து சற்று நிறம் மாறியதும் திருப்பி போட்டு 3 நிமிடங்கள் கழித்து நன்கு பொன்னிறமான ஆனதும் எடுத்து விடவும்.

சூடான சிக்கன் வடை தயார். தக்காளி சோஸுடன் பரிமாறலாம்.chickenvada

Related posts

எளிமையாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி

nathan

தித்திக்கும்… அவல் கொழுக்கட்டை

nathan

சூடான மசாலா வடை

nathan

காளான் கபாப்

nathan

சூப்பரான சைடு டிஷ் ராஜ்மா மசாலா

nathan

டொமட்டோ பிரெட்

nathan

ஸ்பிரிங் ரோல்ஸ் / Spring Rolls

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்

nathan

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்

nathan