ஆள்பாதி..ஆடைபாதி என்பது எல்லா காலத்துக்கும் ஏற்ற பழமொழி. மனிதர்கள் ஒவ்வொருவரும் டி.என்.ஏ., தோலின் நிறம், உடல்வாகு உள்ளிட்டவைகளில் வேறுபடுவதைப்போல, உடை அணிவதிலும்கூட வேறுபட்டே இருக்கிறோம். உடல்வாகுக்கு ஏற்ற உடைகளை அணிவதன் மூலமே, நம்மையும் நம்முடைய ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும். அப்போதுதான்,சமூகத்தில் பிறரில் இருந்து வேறுபட்டு தெரிவோம்.
எத்தகைய உடல்வாகு கொண்டவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணியவேண்டும் என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெனிவீவ் பட்டியலிடுகிறார்.
ஆப்பிள் வடிவ உடல்வாகு
இத்தகைய உடல்வாகை கொண்டவர்களுக்கு தோள்பகுதி வட்ட வடிவிலும் உடலின் நடுப்பகுதி முழுவதையும் ஸ்லிம்மான கால்களே தாங்கியிருக்கும். ‘வி’ நெக் அல்லது வட்டக்கழுத்துடைய மேற்புற ஆடைகள் இவர்களுக்கு பொருததமானதாக இருக்கும்.
இவர்கள் டேப்பர்ட் டவுசர்கள், கழுத்துப்பகுதி மூடிய டாப்ஸ், இறுக்கமான ஆடைகள் மற்றும் சிறிய அளவிலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
பேரிக்காய் வடிவ உடல்வாகு
இவர்களுடைய தொடை மற்றும் தோள் பகுதி சிறியதாக இருக்கும். இவர்களுக்கு ஸ்கர்ட்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இறுக்கமான ஆடைகள், பென்சில் ஸ்கர்ட்ஸ், அடர்நீலம் மற்றும் பிரிண்டட் உடைகளை இவர்கள் தவிர்ப்பது நல்லது.
உடுக்கை போன்ற உடல்வாகு
அனைத்து வகை உடைகளும் இந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
பெரிய அளவிலான பிரிண்டட் மற்றும் பேகி ஸ்டைல் உடைகளை இவர்கள் தவிர்ப்பது நல்லது.
ஒல்லியான உடல்வாகு
இந்த உடல்வாகு உடையவர்கள், தங்களுக்கேற்ற உடைகளை தேர்ந்தெடுப்பது சற்று சிரமமே.
பெரிய அளவிலான உடைகள் மற்றும் உடலோடு ஒட்டியிருக்கும் ஆடைகளை இவர்கள் தவிர்ப்பது நல்லது.