28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201606290713423649 Acne skin problems will Pumpkin Face Pack SECVPF1
முகப் பராமரிப்பு

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்

பூசணிக்காயில் நிறைய நீர்சத்துக்கள் உள்ளது. அதிலுள்ள நீர்சத்தும், கொழுப்புகளை குறைக்கும்.

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்
பூசணிக்காய் சருமத்திற்கும் மிக நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றது. பூசணிக்காயை கொண்டு எவ்வாறு சருமத்தில் அழகூட்டலாம் என பார்க்கலாம். ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் பூசணிக்காயை உபயோகப்படுத்தலாம்.

உங்களுக்கு வறண்ட அல்லது எண்ணெய் சருமம் அல்லது சென்ஸிடிவ் சருமமாக இருந்தாலும், இந்த ஃபேஸியல் பேக் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

பூசணியின் சதைப்பகுதி – அரைக் கப்
தேன் – அரை ஸ்பூன்
பால் – கால் டீஸ்பூன்
பட்டைப் பொடி – சிறிதளவு

பூசணியின் சதைப்பகுதியை மசித்து, அதனுடம் மற்ற பொருட்களை சேர்த்து, முகத்தில் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், சருமம் பளபளப்பாக இருக்கும். சுருக்கங்கள் போய்விடும். வாரம் இருமுறை இதை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

பூசணியின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் சர்க்கரை, கலந்து முகத்தில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவிவிடவும். இது வறண்ட சருமத்தில் ஈரப்பதம் அளித்து, மென்மையாக்கும்.

பூசணியின் சதைப்பகுதியுடன், சிறிது எலுமிச்சை சாறு, ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்த பின் 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இவை எண்ணெய் சருமத்தில் அமில காரத் தன்மையை சமன் செய்யும்.

பூசணி முகப்பருக்களை விரட்டும் தன்மை கொண்டது. பூசணி சதைப்பகுதியுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, கலக்கவும். இவற்றை முகத்தில் போட்டு காய்ந்தவுடன் கழுவுங்கள். வாரம் 3 முறை இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.201606290713423649 Acne skin problems will Pumpkin Face Pack SECVPF

Related posts

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

கொய்யாப்பழ தோலை இப்படி அப்ளை பண்ணுங்க… ஒரு வாரத்துல நீங்க கலராகணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை

nathan

முகத்தில் ஏற்பட கூடிய எல்லா வித பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வை தர!….

sangika

சருமத்திற்கு குளுமை தரும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்

nathan

ஃபேஸ் மாஸ்க் போடும் போது கவனிக்க வேண்டியவை

nathan

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க வீட்டு குறிப்புகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கண்ணுக்கு பூசிய காஜலை நீக்குவதற்கு டிப்ஸ்

nathan

சூரிய ஒளியால் பொலிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்!…

nathan