25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
scrub
கால்கள் பராமரிப்பு

பாதங்களை பராமரிக்கும் ஸ்கரப்

பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை. தோற்றத்தை எத்தனை அழகு படுத்திக் கொண்டாலும், பாதம் வெடித்து, பொலிவின்றி இருந்தால், மொத்த மெனக்கெடலும் வீண். ஒரு அலட்சியத்தோடு கடந்து செல்வார்கள் .

பாதம் வெடிப்பினை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். ஆகவே, தினமும் குளிக்கும் நேரத்தில் பாதங்களுக்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும்.

வெடிப்பின்றி தடுக்கலாம். ஃப்யூமின் கல்லைக் கொண்டு தினமும் தேய்த்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகன்று விடும்.பாதத்தை மிருதுவாக்கும் ஸ்கரப் சீனி, தேன், சமையல் சோடாவால் செய்யப்படும் இந்த ஸ்க்ரப் பாதத்தை அழகாக்கும்.

தேவையானவை :

வெள்ளை சீனி -1 கப்

சமையல் சோடா – 2 டீ ஸ்பூன்

ஒலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்

தேன்- 2 டீஸ்பூன்

பாதாம் அல்லது லாவெண்டர் எண்ணெய் – 2 துளி

சர்க்கரை பாதத்தில் உள்ள கடினத் தன்மையை நீக்கி, மிருதுவாக்கும். சமையல் சோடா தொற்றுக்களை அகற்றும். சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும்.

சருமத்தின் அமில மற்றும் காரத் தன்மையை சமன் செய்யும். தேன் ஈரப்பதம் அளித்து, பாதத்தில் உள்ள வறட்சியை போக்கிவிடும். ஒலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டம் அளித்து, அழகாக்கிறது.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போடுங்கள். அதன் பின் ஒலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்குங்கள். பின்னர் சமையல் சோடாவை போடவும்.

இறுதியில் தேனை சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி நன்றாக கலக்குங்கள். பின்னர் பாதாம் லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெயை இதில் சேர்த்து கலக்குங்கள்.

பிறகு இதனை போத்தலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப் 15 நாட்களுக்கு வரும்.

தினமும் குளிப்பதற்கு முன் இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள். 10 நிமிடம் அப்படியே விட்டு பிறகு குளிக்கச் செல்லலாம். இது பாதம் மற்றும் கைகளுக்கு மிருதுத்தன்மை தருகிறது.

scrub

Related posts

மெத்தென்ற பாதங்கள் கிடைக்க என்ன வழி?இதோ டிப்ஸ்

nathan

ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?

nathan

மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

nathan

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்கள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா கை மூட்டு, கால் மூட்டு கருமையை போக்கும் வழிகள்

nathan

வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்து பாதத்தில் உள்ள கருமையை நீக்க சில வழிமுறைகள் இங்கே…

nathan

பட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

கை, கால், முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு!…

sangika

tips for soft feet-மென்மையான கால்களுக்கு

nathan