28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
facial3
சரும பராமரிப்பு

சருமப் பொலிவுக்கு கைகொடுக்கும் இயற்கையான ஸ்கரப்க

கோடை வெயில் கொளுத்துவதால், ஏராளமான சரும பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதில் முக்கியமாக முகப்பரு வருவதோடு, கரும்புள்ளிகளும், வலிமிக்க கொப்புளங்களும் வரும்.

இதனைத் தடுக்க கோடையில் மட்டுமின்றி, அனைத்து காலங்களிலும் மாலை வேளையில் வீட்டிற்கு வந்ததும் ஒருசில பொருட்களைக் கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும்.

அப்படி செய்வதால் வெளியே வெயிலில் சுற்றி அழுக்குகள் படிந்து கருமையாக ஆரம்பிக்கும் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம்.

மேலும், சரும பிரச்சினைகள் வராமலும் தடுக்கலாம். சரி, இப்போது அந்த நேச்சுரல் ஸ்கரப்களைப் பற்றி பார்ப்போமா…

ஸ்ட்ராபெர்ரி

ஒரு சிறிய பௌலில் ஒரு கையளவு ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போட்டு, கையால் பிசைந்து, பின் அதனைக் கொண்டு முகத்தில் தடவி 6 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த பால் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

இதனால் கோடையிலும் சரும பொலிவு மேம்பட்டு காணப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் உள்ள குளிர்ச்சித்தன்மை, கோடையில் சரும பிரச்சினைகள் வருவதைத் தடுக்கும். அதற்கு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மை யாகவும், பிரச்சினைகளின்றியும் இருக்கும்.

பால்

தினமும் இரவில் பாலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமம் பொலிவுறும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

வாழைப்பழம்: வாழைப்பழத்தை மசித்து, அதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனால் சரும வறட்சி நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, முகம் பிரகாசமாக காணப்படும்.

ரோஸ் வோட்டர்

ரோஸ் வோட்டர் கொண்டு தினமும் காலையிலும், மாலையிலும் முகத்தை துடைத்து எடுத்தாலே, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பளிச்சென்று இருக்கும்.facial

Related posts

தூக்கி எறியும் க்ரீன் டீ பேக்குகளைக் கொண்டு அழகை எப்படி மேம்படுத்தலாம்?

nathan

உடல் நாற்றம்… எப்படித் தவிர்க்கலாம்?

nathan

பெண்களே வீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

சரும நிறத்தை அதிகரிக்கும் புளி

nathan

உங்க ஸ்கின் ரொம்ப சென்சிட்டிவா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ,beauty tips skin tamil

nathan

முதுகில் பருக்கள் வருவது ஏன்? அதை எப்படி அகற்றுவது???

nathan

பார்லர் வேண்டாம்: வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்

nathan

அழகான சருமம் வேண்டுமா? இந்த பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan