28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
lemon
முகப் பராமரிப்பு

எலுமிச்சை பேஷியல்

அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தைக் கொட்டி கெமிக்கல் பொருட்களைக் கொண்டு அழகை மெருகேற்றுவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே பல வழிகளில் அழகை அதிகரிக்க முடியும்.

குறிப்பாக, முகத்தில் உள்ள கருமையை போக்க பலரும் ஃபேஷியல், ப்ளீச்சிங் போன்ற செயல்களை மேற்கொள்வார்கள். இச்செயல்களை எளிமையாக வீட்டிலேயே செய்ய முடியும்.

அதில் இப்போது நாம் பார்க்கப் போவது எலுமிச்சை ஃபேஷியல்.

இந்த ஃபேஷியல் செய்வதால், முகத்தில் உள்ள கருமை உடனடியாக நீங்குவதோடு, எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது.

இங்கு எலுமிச்சை ஃபேஷியலை எப்படி வீட்டிலேயே செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அந்த முறையை அப்படியே பின்பற்றி நன்மை பெறுங்கள்.

முறை 1 முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ெகாட்டனைக் கொண்டு முகத்தில் தடவி 2–3 நிமிடம் மென்மையாக தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

முறை 2 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 4 டீஸ்பூன் ரோஸ் வோட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, ெகாட்டனை இக்கலவையில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

முறை 3 அடுத்து 2 டீஸ்பூன் சர்க்கரையில், 1/2 எலுமிச்சை பழத்தை பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஒலிவ் ஒயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் இக்கலவையை முகத்தில் தடவி 2 நிமிடம் விரல்களால் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முறை 4 பிறகு ஒரு எலுமிச்சை ஃபேர்னஸ் மசாஜ் க்ரீம்மை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்த வேண்டும்.

அதற்கு 2 டீஸ்பூன் ஷியா வெண்ணெயை குறைவான தீயில் சூடேற்றி, நன்கு உருகியதும் அதனை இறக்கி அதில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து காற்றுப் புகாத டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, பின் இந்த க்ரீம்மை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஐஸ் கட்டியால் முகத்தை மசாஜ் செய்யவும். பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

முறை 5 இறுதியில் 2–3 அன்னாசி துண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

குறிப்பு: இந்த எலுமிச்சை ஃபேஷியலை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, முகம் நன்கு பொலிவோடும், இளமையுடனும் காட்சியளிக்கும்.lemon

Related posts

ஜொலிக்கும் சருமத்தைப் பெற ‘இந்த’ ஃபேஷியல் பேக்கை யூஸ் பண்ணுங்க…!

nathan

அழகு குறிப்புகள் tamil beauty tips

nathan

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

sangika

முகத்திற்கு இரவில் போடும் கிரீம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan

சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

nathan

அறுபதிலும் அழகு தரும் அன்னாசி பழம்

nathan

அழகு தரும் கஸ்தூரி மஞ்சள்

nathan

பெண்கள் தங்கள் சருமத்தை மேலும் அழகுபடுத்த! டிப்ஸ்!

nathan

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

nathan