சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
கடல்பாசி 1ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் இரண்டையும் கலந்து நன்றாக முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரீல் அலசவும்.
பயன்கள்:
கடல்பாசியில் வைட்டமின்கள் நிறைய இருப்பதால் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக் மிகவும் நல்லது.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கான பேக் இது:
முல்தாணி மெட்டி ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, முட்டையின் வெள்ளை கரு இதனை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து சிறிது வெது வெதுப்பான நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் சருமத்தை மிருதுவாக்கி சுறுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
வெள்ளரிக்காய்ச்சாறு 1 தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைசாறு ஒரு தேக்கரண்டி இதனை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் போடுவதால் சில நாட்களில் எண்ணெய் பசை குறைந்து விடும். பருக்களும் வராது.