நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது.
வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
கூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. அப்படி ஒன்றுதான் ஹேர் அயர்னிங். எளிதில் செய்துவிடலாம்.
ஒருதடவை ஹேர் அயர்னிங் செய்தால் அடுத்து வரும் நாட்களில் முடி அதிமாய் உதிரும். தலை அரிப்பு பொடுகுத் தொல்லை, அதிக வறட்சி ஆகியவைகள் உங்கள் கூந்தலில் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் நீங்கள் சரியான முறையில் ஹேர் அயர்னின் செய்யவில்லை என்று அர்த்தம். ஹேர் அயர்னிங் செய்யும்போது நீங்கள் செய்யக் கூடாதவை என்னவென்று பார்க்கலாம்.
கடைசி நேரத்தில் அவசரமாக தலைக்கு குளித்தபின் ஈரத்துடனே ஹேர் அயர்னிங் செய்யாதீர்கள். அதனை சரியாக காய விடாமல் ஹேர் அயர்னிங் செய்வது மிகவும் தவறு. கூந்தலில் ஈரம் பட்டவுடன் கூந்தல் மிகவும் மென்மையாக மாறிவிடும். அந்த சமயத்தில் அதிக வெப்பம் கொண்ட கருவியினை உபயோகப்படுத்தினால், தலைமுடி வலுவிழந்து மோசமான விளைவை தரும். அதிகமாய் முடி உதிர்தல் ஏற்படும்.
ஹேர் அயர்னிங் கருவியில் 300 டிகிரிக்கு மேல் வெப்ப நிலையை அமைக்கக் கூடாது. கூந்தலுக்கு இது மிகவும் கேடு தரும். மிக அதிக வெப்பம், முடியினால் தாங்க இயலாது. வறட்சி ஏற்பட்டு கூந்தலை பாழ்படுத்திவிடும். கூந்தல் நுனிபிளவு, பொடுகு ஆகியவை ஏற்பட்டுவிடும்.
பெரும்பாலோனோர் செய்யும் தவறு ஹேர் அயர்னிங் செய்யும் கருவியை சுத்தப்படுத்தாமல் இருப்பது. ஹேர் அயர்னிங் செய்யும்போது கருவியில் அழுக்கு, தூசு, கூந்தலிலிருந்து வரும் எண்ணெய், ஆகியவை உள்ளே தங்கியிருக்கும். இதனை அப்படியே மறுமுறை உபயோகப்படுத்தும்போது கூந்தலில் பொடுகுத் தொல்லை, வறட்சி தொற்று ஆகியவற்றை ஏற்படுத்தும். ஆகவே தகுந்த சுத்தப்படுத்தும் திரவத்தைக் கொண்டு ஹேர் அயர்னிங் கருவியை சுத்தப்படுத்துவது அவசியம்.