28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201606201028293257 Beautiful skin Baby Oil SECVPF1
சரும பராமரிப்பு

சருமத்தை அழகாக்கும் பேபி ஆயில்

நல்ல தரமான பேபி ஆயிலை கொண்டு உங்கள் சருமத்தை எப்படி அழகாக்கலாம் என்று பார்க்கலாம்.

சருமத்தை அழகாக்கும் பேபி ஆயில்
பேபி ஆயிலை பெண்களுக்கு அழகுபடுத்தவும் உபயோகப்படுத்தலாம். பேபி ஆயிலில் விட்டமின் ஈ நிறைய உள்ளது. இது உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நிறைய நன்மைகளை சேர்க்கும். நல்ல தரமான பேபி ஆயிலை கொண்டு உங்கள் சருமத்தை எப்படி அழகாக்கலாம் என்று பார்க்கலாம்.

பேபி ஆயிலில் விட்டமின் ஈ அதிகம் இருப்பதால் அவை சருமத்திலுள்ள சுருக்கங்களை போக்கும். தினமும் பேபி ஆயிலை உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளியுங்கள். சுருக்கங்கள் போக்கி, உடல் மின்னும்.

மேக்கப்பை அகற்ற மிக எளிய வழி பேபி ஆயிலை உபயோகப்படுத்துவதுதான். மற்ற எண்ணெய்கள் அதிக அடர்த்தி இருக்கும். மேக்கப் போனாலும், எண்ணெய் பிசுசுப்பு போகாது. ஆனால் பேபி ஆயில் பிசுபிசுப்பற்றது. இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவினால் மேக்கப் அகன்று, சருமமும் பிசுபிசுப்பின்றி இருக்கும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன் கண்களுக்கு அடியில் பேபி ஆயிலில் மசாஜ் செய்து தூங்குங்கள். விட்டமின் ஈ போதிய அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளதால், கண்களில் உள்ள சுருக்கத்தை போக்கிவிடும். கருவளையத்தை மறையச் செய்துவிடும்.

வேக்ஸிங் செய்த பின் கை கால்களில் எரிச்சல் அரிப்பு ஏற்படுகின்றதா அப்படியென்றால் பேபி ஆயில் பெஸ்ட் சாய்ஸ். இது சருமத்தில் வாக்ஸிங்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு இதம் தந்து, ஈரப்பதம் அளிக்கிறது. எரிச்சல் அரிப்பு மறைந்துவிடும்.

பேபி ஆயிலில் சிறிது சர்க்கரை, எலுமிச்சை சாறு அகியவற்றை கலந்து, உதட்டில் தினந்தோறும் பூசி வாருங்கள். உதட்டில் லிப்ஸ்டிக்கால் படிந்த கருமை போய், சிவப்பாய் அழகான உதடுகளாய் மாறும்.

தினம் இரவு படுக்க போகும் முன் பேபி ஆயிலை கால்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அதன் பின் சாக்ஸ் அணிந்து படுக்கச் செல்லுங்கள். வெடிப்பு மறைந்து பாதம் அழகாய் இருக்கும்.201606201028293257 Beautiful skin Baby Oil SECVPF

Related posts

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

அழகை மென்மேலும் அதிகரிக்க செய்ய உதவும் ரோஸ் வாட்டர்

nathan

ஷாம்பு முதல் பேஸ் பவுடர் வரை எளிதாக வீட்டில் தயாரிக்கலாம்!

nathan

பளபள சருமத்துக்கு பப்பாளி!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்…

nathan

வேலைக்கு போகும் பெண்களுக்கான எளிமையான ஒப்பனை

nathan

சுருக்கம் இல்லாத சருமம் வேண்டுமா ?

nathan

ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்கள்

nathan