26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
3 14 1465895080
முகப் பராமரிப்பு

இளமையான சருமம் பெற இந்த 5 எளிய ஃபேஸியல் மாஸ்க் ட்ரை பண்ணுங்க !!

வயது ஆக ஆக, நமது முகத்தில் இருக்கும் கொழுப்புகள் கரையும், குருத்தெலும்புகள் தேயும். அதனால், சதை தொங்கி, சுருக்கங்கள் ஏற்படும்.

வயதாவதை தடுக்க முடியாதுதான். ஆனால் அதனை தள்ளிப் போடமுடியும்தானே. அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து பார்க்கலாம்.. தவறில்லை.

ஆனால் அவைகள் மேலும் முகத்திற்கு கெடுதல் தராதவைகளாகத்தான் இருக்க வேண்டும். ரசாயனம் கலக்காத இயற்கை வழிகளை இதற்கு தேர்ந்தெடுங்கள்.

அப்படி நமக்கு தெரிந்த எளிய வழிகளை மேற்கொண்டால் நிச்சயம் சருமத்தை பாதுகாத்து இளமையோடு வைக்க முடியும். அவ்வாறான எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயனடையுங்கள்

மசூர் தால் :

மசூர் தால் என்பது ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் துவரம் பருப்பு வகை. இதனை பொடி செய்து பாலுடன் கலந்து முகத்தில் போடவும்.

காய்ந்த பின் குளிர்ந்த் நீரில் கழுவுங்கள். இவை சருமத்தை இறுகச் செய்யும். துவாரங்களை சுருக்கச் செய்யும். சுருக்கங்களை போக்கும். தொடர்ந்து உபயோகித்தால் முகத்தில் இளமை தெரியும்.

பளபளப்பான மிருதுவான சருமம் கிடைக்கும். மசூர் தாலிற்கு பதிலாக அவரை பருப்பையும் ஊற வைத்து அரைத்து முகத்தில் பேக்காக போடலாம்.

வெள்ளைக் கரு மற்றும் பீச் பழம் : முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பீச் பழத்தின் சதைப் பகுதியை மசித்து , முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள்.

இதில் புதினாபொடியையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். இதனை முகத்தில் கீழிருந்து மேலாக போட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். பீச் பழத்தை அழகு நிலையங்களில் உபயோகிப்பார்கள். இது சருமத்தை இறுகச் செய்யும். சுருக்கங்களை போக்கும்.

மஞ்சள் பேக் :

ஒரு ஸ்பூன் அளவுள்ள தயிரில் சிரிது மஞ்சள் பொடியை சேர்த்து, முகத்தில் போடுங்கள். 10 நிமிடங்கள் பிறகு நீரில் கழுவுங்கள். வாரம் மூன்று முறை இந்த மஞ்சள் பேக்கை போட்டுக் கொண்டு வந்தால் சுருக்களே வராது.

முகத்தில் இருக்கும் சரும துவாரங்கள் அடைப்பட்டுக் கொள்ளும். இளமையான சருமத்தை நீட்டிக்கச் செய்யலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் பால் க்ரீம் : பால் க்ரீமில் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தேய்க்கவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவை சருமத்திற்கு நிறமளிக்கும். சுருக்களை நீக்கிவிடும். இறந்த செல்கள் வெளியேறிவிடும். எலுமிச்சை சாறு சருமத்தை இறுகச் செய்யும்.

விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் யோகார்ட் : யோகார்ட் 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். இவற்றில் 2 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்து, நனறாக கலக்கிக் கொள்ளுங்கள்.

இதனை முகம் கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவாறு தொடர்ந்து செய்தால், கரும்புள்ளி, முகப்பரு, சுருக்கங்கள், ஆகியவை காணாமல் போய் விடும். முகம் மாசு மருவின்றி ஜொலிக்கும். இது மிக அருமையான பலனைத் தரும் குறிப்பு. பயன்படுத்திப் பாருங்கள்.3 14 1465895080

Related posts

மூக்கு பராமரிப்பு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க… எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாம் தோலை அழகுக்காக இப்படி யூஸ் பண்ணலாமா!

nathan

முகத்தை வெள்ளையாக்க விரும்புவோர் செய்யும் தவறுகள்.!

nathan

வீட்டிலேயே கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

முகம் பொலிவடைய வேண்டுமா?

nathan

நீங்கள் கண்டதையும் முகத்துல தடவுறத விடுங்க… ஆப்பிளை மட்டும் இதோட கலந்து தடவுங்க… சூப்பர் டிப்ஸ்

nathan

முகத்தை பொலிவடையச்செய்யும் தக்காளி பேஷியல் ஸ்கரப்

nathan

முட்டைகோஸ் பேஷியல்

nathan