23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
d7IZk6H
முகப் பராமரிப்பு

ஹெர்பல் ஃபேஷியல் facial tips in tamil

நான் பல வருடங்களாக ஹெர்பல் ஃபேஷியல்தான் செய்து வருகிறேன். சமீப காலமாக ஃபேஷியல் செய்தாலுமே, என் முகம் பொலிவிழந்து காணப்படுவதை உணர்கிறேன். ஒவ்வொரு முறை பார்லருக்கு போகும் போதும் ஏதேதோ புதிய ஃபேஷியல்களை பற்றிச் சொல்லி அதைச் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். பல வருடங்களாக பழகிப் போன ஹெர்பல் ஃபேஷியலை தவிர்த்துப் புதிதாக முயற்சி செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

நம் உடல் உறுப்புகளுக்கு எப்படி வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, தாதுச்சத்து என எல்லாம் தேவையோ, அப்படித்தான் சருமத்துக்கும். ஃபேஷியல் என்பது ஒவ்வொருவரின் வயது, சருமத்தின் தன்மை, அவரது தேவை ஆகியவற்றுக்கேற்ப செய்யப்பட வேண்டியது. ஒரே ஃபேஷியலை பல வருடங்களாகச் செய்து, இப்போது அதில் பலனில்லை என்கிறீர்கள். சருமம் எண்ணெய் பசையானதா, வறண்டதா, இரண்டும் கலந்த காம்பினேஷன் சருமமா என்பதைப் பொறுத்து, அதற்கேற்ற ஃபேஷியல் செய்யும்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும். உங்கள் சருமத்தை டெஸ்ட் செய்து, அதற்கு என்ன தேவை என்பதை அறிந்து உங்களுக்கான சரியான ஃபேஷியலை ஓர் அழகுக்கலை நிபுணரால்தான் சொல்ல முடியும்.

சருமத்தின் தன்மையும் சீசனுக்கு தகுந்தபடி மாறும். வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதால் பிசுபிசுப்புத் தன்மை அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் சருமம் வறண்டிருக்கும். எல்லா சீசனிலும் ஒரே ஃபேஷியல் என்பது பொருத்தமாக இருக்காது. இது தவிர சிலருக்கு முதுமையைத் தள்ளிப் போட ஆன்ட்டி ஏஜிங் ஃபேஷியல் தேவைப்படும். மணப்பெண்களுக்கு அதிக பளபளப்பைக் காட்டக்கூடிய பிரைடல் ஃபேஷியல்கள் செய்யப்படும். எனவே, நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொண்டு அழகுக்கலை நிபுணரை அணுகி, உங்கள் சருமத்தை டெஸ்ட் செய்யுங்கள்.

பிறகு அதற்கேற்ற ஃபேஷியலை செய்து கொள்ளுங்கள். சருமம் மிக மோசமான நிலையில் உள்ளவர்கள் 15 நாட்களுக்கொரு முறையும், மிக ஆரோக்கியமான சருமம் கொண்டவர்கள் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். ஆனால் ஃபேஷியலின் பலனைத் தக்க வைத்துக் கொள்ள தினமும் கிளென்சிங், டோனிங், மாயிச்சரைசிங் செய்து கொள்ள வேண்டும்.d7IZk6H

Related posts

உங்களுக்கு பைசா செலவில்லாம அம்மை தழும்ப நீக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

கோடையில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan

மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

nathan

அழகு குறிப்புகள்:மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

nathan

பழவகை ஃபேஷியல்

nathan

இளமையைத் தக்க வைத்துக் கொள்ள இத செய்யுங்கள்!…

sangika

Tomato Face Packs

nathan

அழகு குறிப்புகள்:சுருக்கமே இல்லாமல்…

nathan

உங்களுக்கு தெரியுமா க்ரீன் டீயின் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!

nathan