கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும்… பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரியாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீட்டில் இருக்கும்போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள்.
நாளடைவில் நீங்களே பெரிய ஐ லைனர் கலைஞராக மாறி உங்கள் நண்பிகளுக்கு போட்டுவிட்டு சபாஷ் பெறுபவராக மாறுவீர்கள்.
சரி கண்களை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப்போம்.
உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்…
கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும்.
பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள்.
கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.
சிறிய கண்களைக் கொண்டவர்கள்..
நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.
இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள்.
சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.
உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு…
கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும்.
இது உங்கள் கண்களை அழகாக்கும்.