25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
01 1459496418 2 multanimittiwithalmond
கண்கள் பராமரிப்பு

கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது எப்படி?

கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க இயற்கை வழிகளைக் காணும் முன், அந்த கருவளையங்கள் ஏன் வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கருவளையங்கள் வயிற்றுப் பிரச்சனைகள், மன அழுத்தம், வேலைப்பளுவுடன் தூக்கமின்மை போன்றவைகளால் வரக்கூடும்.

கருவளையங்களைப் போக்க பல வழிகள் உள்ளன. ஆனால் அதில் முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவதால், கருவளையங்கள் நீங்குவதோடு கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களும் நீங்கும்.

சரி, இப்போது கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் எனப் பார்ப்போம்.

முல்தானி மெட்டி மற்றும் வெள்ளரிக்காய் சாறு

முல்தானி மெட்டி பொடியை வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, கருவளையம் மற்றும் முகத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

முல்தானி மெட்டி மற்றும் பாதாம் முல்தானி மெட்டி பொடியுடன், பாதாம் பொடி மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ, முகம் மற்றும் கண்கள் பொலிவுறும்.

முல்தானி மெட்டி மற்றும் பால்

பால் ஈரப்பசையை அதிகரித்து, திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முல்தானி மெட்டி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை முல்தானி மெட்டி பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

முல்தானி மெட்டி மற்றும் தயிர்

முல்தானி மெட்டியுடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ, சோர்வடைந்த கண்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருமையும் அகலும்.

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை

சருமத்தில் உள்ள கருமையை எலுமிச்சை மிகவும் எளிதில் நீக்கும். அத்தகைய எலுமிச்சை சாற்றினை முல்தானி மெட்டி பொடியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் புத்துணர்ச்சி அடையச் செய்யும். எனவே முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டருடன் சேர்த்து பேஸ் செய்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ, கருவளையம் மட்டுமின்றி, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் அகலும்.

முல்தானி மெட்டி மற்றும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, முல்தானி மெட்டி பொடியுன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கருவளையங்கள் விரைவில் மறையும்.

01 1459496418 2 multanimittiwithalmond

Related posts

கருவளையம்

nathan

கண்களில் சுருக்கங்களை போக்கும் பெஸ்ட் ரெசிப்பிஸ் !!

nathan

கருவளையமா…கவலை வேண்டாம் !

nathan

மொபைலில் கவனம்… வரலாம் கருவளையம்! அலர்ட் கேர்ள்ஸ்

nathan

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!….

sangika

கருவளையம் போக்கும் எளிய மசாஜ்

nathan

கண்களுக்கு அடியில் சதைப்பை தொங்குகிறதா?

nathan

சன் கிளாஸ் கண்ணை காக்குமா? வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan