தேவையானவைகள்:
மட்டன் – 1 கிலோ
வெங்காயம் பெரியது : 2 (நன்கு பொடியாக வெட்டிகொள்ளவும்)
தக்காளி – 1 பெரியது (நன்கு பொடியாக வெட்டிகொள்ளவும்)
கடுகு – 1 / 2 டீஸ்பூன்
கருவேப்பில்லை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பட்டர் – கொஞ்சம்
அரைத்து கொள்ளவேண்டிவைகள்:
சின்ன வெங்காயம் – 10 – 15
பூண்டு – 5 அல்லது 6 பல்
இஞ்சி – சிறிது
கருவபட்டை – 2
கிராம்பு – 5
மிளகு – 5
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சத்தூள் – 1 / 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
பெரும் ஜீரகம் – 1 / 2 டீஸ்பூன்
சிறுஜீரகம் – 1 / 2 டீஸ்பூன்
செய்முறை:
அரைத்து கொள்ளவேண்டியவைகளை நன்கு பேஸ்ட் போல அரைத்து சிறு துண்டுகளாக நறுக்கி இருக்கிற மட்டன் உடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 30 – 45 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கூக்கர் இல் சிறிது எண்ணையை ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஊறவைத்த மட்டன்னை சேர்த்து 4 அல்லது 5 விசில் வரும் வரை நன்கு வேக வைக்கவும்.
பின்பு வேறு ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு கடுகை போட்டு அது வெடித்த பிறகு கருவேப்பில்லை மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கி உள்ள வெங்காயத்தையும் சேர்த்து பொன் நிறம் வரும் வரை வதக்கவும். பின்பு சிறு துண்டுகளாக நறுக்கி உள்ள தக்காளியையும் சேர்த்து அவைகள் மென்மையாகும் வரை வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு, வேகவைத்த மட்டன்னை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
கடைசியாக சிறிது பட்டர் சேர்த்தால் சுவையான, மணமான செட்டிநாடு மட்டன் கறி ரெடி. இதை சப்பாத்தியுடன் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.