31 1446291672 vajramfish
அசைவ வகைகள்

வஞ்சரம் மீன் ப்ரை – சன்டே ஸ்பெஷல்!

விடுமுறை நாட்களில் தான் மீனை சமைத்து சாப்பிட முடியும். சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத் தான் பிடிக்கும். அப்படி மீன் ப்ரை பிடிக்குமானால், வஞ்சர மீன் வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள்.

இங்கு வஞ்சரம் மீன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வஞ்சரம் மீன் – 6-8 துண்டுகள் மிளகாய் தூள் – 3 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் சோள மாவு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், எலுமிச்சை சாறு, சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் மீன் துண்டுகளை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீன் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதேப்போல் மீதமுள்ள மீன் துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்தால், வஞ்சரம் மீன் ப்ரை ரெடி!!!31 1446291672 vajramfish

Related posts

வெங்காய இறால்

nathan

சுவையான கேரளா சிக்கன் ப்ரை

nathan

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

nathan

சுவையான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

nathan

முட்டை குழம்பு வைப்பது எப்படி,ருசியான முட்டை குழம்பு ,egg curry recipe

nathan

ஜிஞ்சர் கார்லிக் சிக்கன்

nathan

அவித்த முட்டை பிரை

nathan

கோழி ரசம்

nathan

மொறு மொறுவென்ற கோழி நக்கட்ஸ்

nathan