28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
HgpNyA6
கேக் செய்முறை

மினி பான் கேக்

என்னென்ன தேவை?

மைதா – 2 கப்,
சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
உருக்கிய வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
பொடித்த டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் – 1/4 கப்,
கிவி, ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் என விருப்பமான பழங்கள் (விருப்பமான வடிவத்தில் நறுக்கியது) – 1/2 கப்,
உப்பு – 1 சிட்டிகை, சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
பால் – 1 1/2 கப்,
தயிர் – 1/4 கப்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க…

பொடித்த பழங்கள், நட்ஸ் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

இப்போது மைதா, பால், சர்க்கரை, பேக்கிங் பவுடர், சோள மாவு, தயிர், 1 சிட்டிகை உப்பு, 1 டீஸ்பூன் வெண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கி வைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு நான்-ஸ்டிக் பேனை சூடாக்கி, முதலில் ஒரு சிறிய பான் கேக்கை ஊற்றவும். மெல்லியதாக (அடை போல) பின் அதன் மேல் பொடித்த நட்ஸையும் டிரை ஃப்ரூட்ஸையும் சிறிது தூவி, அதற்கு மேல் மீண்டும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.

மிதமான தீயில் மெதுவாக வேக வைக்கவும். சுற்றிலும் வெண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு சிறிது வெண்ணெய் விட்டு எடுத்து அதன் மேல் பொடித்த ஃப்ரெஷ் பழங்கள், நட்ஸால் அலங்கரித்துப் பரிமாறவும். ஃப்ரெஷ் க்ரீம், தேன், சாக்லெட் சாஸுடன் பரிமாறலாம்.HgpNyA6

Related posts

மாம்பழ கேக் புட்டிங்

nathan

பேரீச்சம்பழக் கேக்

nathan

அரிசி மாவு கேக்

nathan

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

உலர் பழ கேக் (Dry Fruit Cake)

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கோகோ கேக்

nathan

சாக்லேட் கேக்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக்

nathan

தேங்காய் கேக்

nathan