25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
06 1459924344 6 avocado
சரும பராமரிப்பு

வெயிலில் செல்லும் போது சருமம் எரிகிறதா? இதோ அதைத் தடுக்க சில வழிகள்!

சாதாரண வெயிலில் சுற்றும் போது சிலருக்கு சருமம் பயங்கரமாக எரியும். அதிலும் கோடையில் என்றால் தாங்க முடியாத அளவில் எரிச்சலை சந்திக்க நேரிட்டு, சருமத்தின் நிறம் கருமையாகும். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், கோடையில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்க வேண்டும்.

அப்படி கோடையில் விலை மலிவில் கிடைக்கும் பொருள் தான் வெள்ளரிக்காய். இதனைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

சரி, இப்போது வெள்ளரிக்காயைக் கொண்டு சருமத்திற்கு எப்படியெல்லாம் பராமரிப்பு கொடுக்கலாம் என்று பார்ப்போம்.

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற ஒன்று.

வெள்ளரிக்காய் மற்றும் முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி பொடியில் வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ, முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் நீங்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தேன்

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் நீர்ச்சத்தை தங்க வைத்து, சருமம் வறட்சியடைவதைத் தடுக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள்

ஆப்பிளை அரைத்து, வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, குளிர்ச்சியான நீரால் முகத்தைக் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்ற ஒன்று.

வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை

வெள்ளரிக்காயை சாறு எடுத்து, அத்துடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து தினமும் கழுவி வர, முகத்தில் உள்ள கருமைகள் அகலும்.

வெள்ளரிக்காய் மற்றும் அவகேடோ

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் அவகேடோ பழத்தை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகம் புத்துணர்ச்சியுடனும், வறட்சியின்றியும் பொலிவோடு காணப்படும்.

06 1459924344 6 avocado

Related posts

அக்குள் ரொம்ப அரிக்குதா? அப்ப இத படிங்க!

nathan

குழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்க!

sangika

காது அழகு குறிப்புகள்.

nathan

பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற

nathan

இந்த பூவெல்லாம் சருமத்திற்கு இத்தனை அழகை தருமா? அசத்தும் பூ அழகுக் குறிப்புகள்!!

nathan

அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்!!!

nathan

வசிய மூலிகைப் பற்றி தெரியுமா?அதெப்படி உங்களுக்கு நன்மை தரும்? உங்களுக்காக ஒரு அரிய சித்த வைத்தியம்!!

nathan

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க!…

sangika

முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட உருளைக்கிழங்கு பேஸ்பேக்…!!

nathan