29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
11 1457677638 8 egg yolk
தலைமுடி சிகிச்சை

ஹெல்மட் அணிவதால் ஏற்படும் தலைமுடி உதிர்வைத் தடுக்க சில அற்புத வழிகள்!

ஆண், பெண் என இருபாலரும் வருத்தம் கொள்ளும் ஓர் விஷயம் தலைமுடி உதிர்வது. இப்படி தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஹெல்மட் அணிவது. தற்போது அனைத்து ஆண்களிடமும் பைக் உள்ளது. அதுமட்டுமின்றி, ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டுமென்ற சட்டமும் உள்ளது.

ஹெல்மட்டை நீண்ட நேரம் அணிவதால் தலையில் வியர்வை அதிகரித்து, மயிர்கால்கள் வலிமையிழப்பதோடு, ஸ்கால்ப் ஆரோக்கியத்தை இழந்து, அதிகம் உதிர ஆரம்பிக்கும். எனவே முடி உதிர்வதைத் தடுக்க நாம் ஏதேனும் ஒரு துணியை தலையில் கட்டிக் கொண்டு பின் ஹெல்மட் அணிவோம்.

இருப்பினும் இது மட்டும் போதாது. ஒருசில பராமரிப்புக்களையும் தலைமுடிக்கு கொடுக்க வேண்டியது அவசியம். இங்கு ஹெல்மட் அணிவதால் ஏற்படும் தலைமுடி உதிர்வதைத் தடுக்க சில அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை

எலுமிச்சை ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் பொருள். எனவே வாரத்திற்கு 1 முறை எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை அலசி, நன்கு உலர வைத்து, பின் ஸ்கால்ப்பில் எண்ணெய் தடவ வேண்டும். இப்படி செய்வதால் ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருக்கும்.

வினிகர்

நீண்ட நேரம் ஹெல்மட் அணிவதால் தலைமுடி பொலிவிழக்க ஆரம்பிக்கும். எனவே முடியின் பொலிவை அதிகரிக்க ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அந்நீரால் தலைமுடியை அலசுங்கள். இதன் மூலம் தலைமுடியின் பொலிவு அதிகரிப்பதோடு, தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.

வெங்காய சாறு

வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் படும் படி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து அலச, அதில் உள்ள வைட்டமின் ஈ தலைமுடியின் மென்மை, வலிமை மற்றும் பொலிவு அதிகரிக்கும்.

கற்றாழை

கற்றாழை ஜெல் கூட தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் அலசி, உலர வைக்க வேண்டும். இந்த முறையை மேற்கொள்ளும் போது ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இம்முறையை வாரத்திற்கு 2 முறை பின்பற்றினால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

பூண்டு

வாரம் ஒருமுறை பூண்டினை தேங்காய் அல்லது நல்லெண்ணெயில் தட்டிப் போட்டு சூடேற்றி, பின் அந்த எண்ணெயால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசி வர, தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, முடியின் வலிமையும் அதிகரிக்கும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு சூடேற்றி இறக்கி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை வடிகட்டி அதனைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முட்டை கண்டிஷனர்

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச தலையில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முடியின் வலிமை அதிகரித்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.

11 1457677638 8 egg yolk

Related posts

இளநரையைப் போக்கி, கருகருவென முடி வளர்ச்சியைத் தரும் தும்மட்டி பழங்கள் !! சூப்பர் டிப்ஸ்…

nathan

முடியின் அடர்த்தி குறைகிறதா? அப்ப உடனே இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

முடி கருப்பாக வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய் – இயற்கை மருத்துவம்

nathan

கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது கவனிக்க வேண்டிவை

nathan

எண்ணெய்ப் பசையான கூந்தல்

nathan

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!

nathan

தலைமுடியை‌ப் பாதுகா‌க்க

nathan

அழகான, நீண்ட கூந்தலை பெற சில எளியவழிமுறைகள்!….

nathan

முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

nathan