27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
14 1457936260 6 eggwhite
முகப் பராமரிப்பு

முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முகத்தில் உள்ள கருமையைப் போக்குவது எப்படி?

சருமத்திற்கு நல்ல ஊட்டத்தை வழங்கும் உணவுப் பொருட்களில் ஒன்று முட்டையின் வெள்ளைக்கரு. இதற்கு முட்டையில் உள்ள புரோட்டீன் தான் காரணம். இந்த புரோட்டீன் நல்ல மாய்ஸ்சுரைசராகவும், சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கவும் செய்யும்.

இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்க உதவும். எனவே நீங்கள் வெள்ளையாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வாரம் ஒருமுறை முட்டை வெள்ளைக்கருவைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள்.

முதல் முறை

ஒரு பௌலில் 2 முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து முகத்தின் மேல் தடவ வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு தேய்த்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிப்பதைக் காணலாம். முக்கியமாக இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

இரண்டாம் முறை

2 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தக்காளி சாறு மற்றும் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையினால் தக்காளியில் உள்ள லைகோபைன் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தை வெள்ளையாக்கும்.

மூன்றாம் முறை

ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அதோடு 4 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் நனைத்த காட்டன் துணியால் துடைத்து எடுத்த பின், கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

நான்காம் முறை

1 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது கடலை மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

ஐந்தாம் முறை

ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் சிறிது கேரட்டை துருவி போட்டு, பால் சிறிது ஊற்றி நன்கு கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் உள்ள முதுமைக் கோடுகள் அனைத்தும் நீங்கி, இளமைத் தோற்றம் தக்கவைக்கப்படும்.

ஆறாம் முறை

முட்டையின் வெள்ளைக்கருவுடன் முல்தானி மெட்டி சேர்த்து நன்கு ஒருசேர கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் இருந்து எண்ணெய் வழிவது தடுக்கப்பட்டு, முகப்பொலிவு இன்னும் மேம்படும்.

ஏழாம் முறை

வாரத்திற்கு 2-3 முறை வெறும் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தாலே, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.

14 1457936260 6 eggwhite

Related posts

கலாக்காய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!….

sangika

உங்களுக்கு தெரியுமா இயற்கையாக தயாரிக்கப்பட்ட டே கிரீம் முகப்பரு வராமல் தடுக்க எப்படி உதவுகிறது?

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சீக்கிரமாக போக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

7 நாட்களில் முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த ஆரஞ்சு ஃபேஸ் மாஸ்க் போடுங்க…

nathan

சருமத்தை மின்னச் செய்யும் பூசணிக்காய் ஃபேஸ் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

சருமத்தை பாதுகாக்கும் களிமண் தெரப்பி – அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே உங்க முகத்தில் அசிங்கமாக தோல் உரிய ஆரம்பிக்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி

nathan

தோல் சுருக்கமா?

nathan