என்னென்ன தேவை?
கடலை மாவு – 100 கிராம்,
நெய் – 100 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
சர்க்கரை இல்லாத கோவா – 1/2 கப் (50 கிராம்),
பொடித்த ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை,
சீவிய பாதாம் – அலங்கரிப்பதற்கு சிறிதளவு.
(சர்க்கரை உள்ள கோவாவாக இருந்தால் சர்க்கரை அளவை கம்மியாக்கவும்.)
எப்படிச் செய்வது?
கடாயில் சிறிது நெய்யை சூடாக்கி கடலை மாவை சேர்த்து பச்சை வாசனை போக வறுத்து இறக்கவும். சர்க்கரையில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கம்பி பாகு பதம் வந்ததும் இதில் கடலை மாவை சேர்த்து கிளறவும். இதில் கோவாவை துருவிச் சேர்க்கவும். ஏலக்காய் மற்றும் மீதி உள்ள நெய்யை சேர்த்து கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு கைவிடாமல் கிளறவும். இது சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.
குறிப்பு: இந்த கோவா பேசன் பர்பியாக வேண்டும் என்றால் பாகு சிறிது நேரம் இருகட்டும். (உருட்டும் பதம்). சாஃப்டு கேக்காக வேண்டும் என்றால் மேல் கொடுத்த செய்முறையில் கிளறி இறக்கி அலங்கரிக்கவும்.