23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கருவளையத்திற்கு தீர்வு தரும் எலுமிச்சை

eyeபெண்களுக்கு பெரிய பிரச்சனையே கண்ணுக்கு கீழே ஏற்படுகின்ற கருவளையம் தான். அந்த கருவளையத்திற்கு தீர்வு தருகிறது எலுமிச்சை.

* அரை டீஸ்புன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

* எலுமிச்சைச்சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ப்ளீச் செய்தது போல் பளிச்சென்று பிரகாசிக்கும்.

* ஜூரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை.

* 2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலைவிட்டு பேஸ்ட் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள்.

* கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு.

* இளம் வயதிலேயே சிலருக்கு தோல் துவண்டு வயதான தோற்றத்தைத் தரும்.

* இதற்கு அருமையான வைத்தியம் எலுமிச்சையில் இருக்கிறது. துருவிய உருளைக்கிழங்கு – அரை கப் எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் – ஒரு டீஸ்பூன், இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.

* முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

Related posts

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

nathan

60 நொடி சேலஞ்ச்!…பெண்களுக்கு மட்டுமா.?!

sangika

முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய்!…

nathan

உடலுக்கு வலுகொடுக்கும், முப்பருப்பு வடை.!

nathan

சர்வதேச பெண்கள் தினம் ஏன் மார்ச் 8?

nathan

இரண்டு ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் யார்?

nathan

இந்த பழக்கவழக்கங்கள்தான் உடல் பருமனாவதற்கு காரணம்.!

nathan

ஆரஞ்சு ஃப்ரூட் பேக் முகத்தை பளபளப்பாக்கும்!….

nathan

நம்ப முடியலையே…பிரபல நடிகை அசின் மகளா இது?? அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்!!

nathan