25 C
Chennai
Wednesday, Nov 13, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

இயற்கை கலரிங்…

ld700“பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.

“கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது…..

டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.

இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!

தேங்காய்க் கீற்று  2
வெள்ளைமிளகு  1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:

இளம் மருதாணி இலை  50 கிராம்
நெல்லிக்காய்  கால் கிலோ
வேப்பங்கொழுந்து  2 கிராம்…

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

இயற்கை கலரிங் முறை:

சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.

Related posts

கட்டாயம் இதை படியுங்கள்..பெண்களையும் பாதிக்கும் வழுக்கை!

nathan

தலைக்கு குளிக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள்…!

nathan

கூந்தல்: நரையும் குறையும்

nathan

இளநரையைத் தடுக்கும் மருந்து!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சாத்துக்குடி ஜூஸின் மூலம் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ஆண்களே! என்ன பண்ணாலும் உங்க தலையில இருக்க பொடுகு போகமாட்டீங்குதா?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க க்ரீன் டீயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…!

nathan

கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சில டிப்ஸ் –

nathan