27.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
சிவந்த சருமம் பெற பாதாம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணியிருக்கீங்களா?
சரும பராமரிப்பு

சிவந்த சருமம் பெற பாதாம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணியிருக்கீங்களா?

சிவந்த சருமம் என்பது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாய் இருந்தாலும், மனதளவில் எல்லோருமே சில சமயங்களில் விரும்புகிறோம். மாநிறமாக பிறந்தாலும் அழகுதான். கருப்பாக பிறந்தாலும் அழகுதான்.

ஆனால் சருமம் தொடர்ந்து சூரிய ஒளியிலும் மாசு நிறைந்த சுற்றுபுறத்தினாலும் மோசமடையும்போதுதான் நமக்கு கவலைகளை தரும்.

அதுமட்டுமில்லாமல், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு,ஆகியவைகளும் சருமத்தை முதலில் பாதிக்கின்றன்.பெரும்பாலான பெண்களுக்கு 28 வயது வரை முகப்பரு பிரச்சனையயும் சேர்ந்து முகத்தை கெடுக்கும்.

இந்த சமயங்களில் டிவியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட கெமிக்கல் கலந்த ஃபேர்னஸ் க்ரீம்களையும் வாங்கி உபயோகப்படுத்துகிறோம். இது சருமத்தில் அப்போதைக்கு நிறமாய் காட்டினாலும் போகப் போக மேலும் பாதிப்பைதான் தருமே தவிர நிரந்த தீர்வை தராது.

ஆகவே உங்களின் பிரச்சனையை தீர்க்க, இயற்கையானவைகளையே நாடுங்கள். உங்கள் சருமத்திற்கு சற்றும் கேடு விளைவிக்காத இந்த ஃபேஸ் பேக்கை முயன்று பாருங்களேன்.

பாதாம் ஃபேஸ்பேக் : இந்த ஃபேஸ்பேக்கின் நன்மை என்னவென்றால், முகத்திலுள்ள கருமையை போக்கும்.சருமத்திற்கு சற்று நிறத்தினை கூட்டி மிளிரச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

சுருக்கங்கள் போக்கி, வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு உகந்தது இந்த அழகு குறிப்பு. எப்படி செய்வோம் என பார்க்கலாம்.

தேவையானவை :

பாதாம் =3-4 பால்- 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்

பாதாமில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும். பாதிக்கப்பட்ட திசுக்களை சீர் செய்து, போஷாக்கு அளிக்கும்.

பால் சிறந்த மாய்ஸ்ரைஸர் ஆகும். வறண்ட சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கிறது. எலுமிச்சை சாறு இயற்கை ப்ளீச் தருகிறது. வெயிலினால் பாதிப்படைந்த சருமத்தில் உண்டான கருமையை அகற்றி நிறத்தினைக் கூட்டுகிறது.

செய்முறை :

பாதாமை இரவினில் ஊற வையுங்கள். மறு நாள் அதனை அரைத்து அதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்ட் போலாக்குங்கள். இப்போது இந்த கலவையினை முகத்திலும் கழுத்திலும் தேய்த்து இதமாக மசாஜ் செய்யுங்கள்.

ஒரு 20 நிமிடங்கள் காய விடவும். பின் குளிர்ந்த நீரினால் கழுவலாம். வாரம் ஒரு முறை செய்தால்,முகம் மாசு மருவின்றி ஜொலிக்கும். நிறம் கூடும்.மிருதுவாய் மாறும். மாற்றத்தை உணர செய்து பாருங்கள்.

Related posts

தீபாவளிக்கு நல்லெண்ணெய் குளியல் !சூப்பர் டிப்ஸ்…

nathan

தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சியா?

nathan

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா?

nathan

வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்!

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கான பிகினி வேக்ஸிங் முறைகளில் சிறந்தது எது?

nathan

மருதாணி வைப்பதால் என்னென்ன நன்மைகள் நடக்கும்னு தெரியுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

வெயிலில் விளையாடுவதால் சருமம் கருப்பாகுமா?skin care tips

nathan

சருமத்திற்கு அழகு சேர்க்கும் எலுமிச்சை

nathan