சாந்தனு திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன். சாந்தனு தனது தந்தையைப் போல ஒரு நடிகராக வேண்டும் என்று விரும்பினார், மேலும் சிறு வயதிலேயே படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அங்கு அவர் “வெட்டிய மடிச்சு கட்டு” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சக்கரக்கட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆரம்பத்தில் நடிக்க சில நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்தார், ஆனால் சில வருடங்களாக சரியான கதைகள் கிடைக்காததால் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இவர் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். படத்தில் அவரது பாத்திரம் பற்றி அதிகம் பேசப்படவில்லை.
ஆனால் சாந்தனு வெற்றியைத் தேடித் தொடர்ந்து முயற்சி செய்கிறார். சமீபத்தில் வெளியான அவரது ப்ளூ ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் விடுமுறையைக் கொண்டாடும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.