சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2015 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், புவி வெப்பமடைதலை 2 டிகிரிக்குக் குறைவாகக் கட்டுப்படுத்துவதற்கான காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் முதலில் இணைந்த அமெரிக்கா, டிரம்ப் நிர்வாகத்தின் போது விலகுவதாக அறிவித்தது. காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜனாதிபதி டிரம்ப், அது வளரும் நாடுகளுக்கு சாதகமாக இருப்பதாக விமர்சித்தார். இதற்கிடையில், அடுத்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ளும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, காலநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான 2015 ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான தனது நோக்கத்தை ஐக்கிய நாடுகள் சபைக்குத் தெரிவிக்கும் முறையான கடிதத்தில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.