24.5 C
Chennai
Tuesday, Jan 7, 2025
தலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கும் நேச்சுரல் ஹேர் ஆயில்!
தலைமுடி சிகிச்சை

தலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கும் நேச்சுரல் ஹேர் ஆயில்!

தலைமுடியில் பிரச்சனை இல்லாதவர்களைக் காணவே முடியாது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகுத் தொல்லை, முடியின் முனைகளில் வெடிப்பு, முடி வளராமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இதற்காக கடைகளில் அல்லது விளம்பரங்களில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் தலைமுடியில் இருந்த பிரச்சனை அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்காது.

ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை தலைமுடி பிரச்சனைக்கான ஓர் எளிமையான நேச்சுரல் ஹேர் ஆயிலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தயாரித்து தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால், தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

கற்றாழை

கற்றாழையில் புரோடியோலிடிக் என்னும் நொதி உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கும். மேலும் இது சிறந்த கண்டிஷனர் போன்றும் செயல்படும். அதுமட்டுமின்றி, கற்றாழை முடியின் வளர்ச்சயைத் தூண்ட, பொடுகைக் குறைக்க, உச்சந்தலை அரிப்பைத் தடுக்கவும் செய்யும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் மயிர்கால்களை வலிமைப்படுத்தும் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இது மயிர்கால்கள் நன்கு சுவாசிக்க உதவும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி, முடியின் நிறத்தைத் தக்க வைக்க உதவும்.

வெங்காயம்

வெங்காயத்தில் முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான சல்பர் வளமாக நிறைந்துள்ளது. வெங்காயம் முடி உடைவதையும், பாதிக்கப்பட்ட மயிர்கால்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வளரவும் உதவும். ஏனெனில் சல்பரானது முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.

மிளகு

மிளகில் கேப்சைசின் என்னும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சேர்மம் உள்ளது. முக்கியமாக மிளகு தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் பெற வழிவகுக்கும்.

தேவையான பொருட்கள்

கற்றாழை – 1 பெரிய இலை கறிவேப்பிலை – சிறிது சின்ன வெங்காயம் – 2 (நறுக்கியது) மிளகு – 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1/4 கப்

செய்முறை

* முதலில் கற்றாழை இலையின் முனைகளில் உள்ள கூர்மையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். * பின் மிக்ஸியில் கற்றாழைத் துண்டுகளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * அடுத்து அதனை வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இக்கலவையை வடிகட்டும் போது சற்று பொறுமை அவசியம்.

* பின்பு ஒரு வாணலியை நன்கு சூடேற்றிக் கொண்டு, அதில் வடிகட்டி வைத்துள்ள கற்றாழை சாற்றினை ஊற்றி நன்கு பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

குறிப்பு

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், தலை முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்றவை குறைந்து, முடி நன்கு வளர்வதைக் காணலாம்.

Related posts

முடியின் அடர்த்தி குறையுதா? முடி அதிகமா கொட்டுதா?

nathan

கூந்தல் நீளமாக வளர உதவும், அதிசய மூலிகை எண்ணெய்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா வழுக்கை தலை வராம இருக்கணும்னா இந்த பொருட்களை கலந்து இப்படி தடவினா போதும்!

nathan

கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் வகைகள்

nathan

எண்ணெய் கொண்டு தலை மசாஜ் செய்யும் போது.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முக அழகை வசிகரமாக்கும் வண்ண கூந்தல்!

nathan

முடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

திருமணத்திற்கு முன் உங்கள் முடியை பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!!

nathan

முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன ?

nathan