பனிக்காலமும்… மழைக்காலமும் சுகமானது என்பார்கள். ஆனால் பனிக்காலத்தில் மேக்கப் என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயமே.. ஏனென்றால் ட்ரை ஸ்கின், ஒயில் ஸ்கின்
என்று தோலின் தன்மைக்கேற்ப மேக்கப் போடவேண்டும். பனிக்காலத்தில் பெரும்பாலும் சருமம் வறண்டிருக்கும். அதற்கு தகுந்தாற்போல் சிம்பிளாக மேக்கப் செய்து கொள்வது நல்லது. அலுவலகம், பிசினஸ், வேலை என்று வெளியே செல்லும் பெண்கள், மேக்கப் போட்டதே தெரியாமல் மேக்கப் போட்டுக் கொண்டால் அழகாக இருக்கும். அந்த சிம்பிள் மேக்கப் எப்படி போடுவது என்பதை படிப்படியாக பார்ப்போம்.
முதலில் கன்சீலரை லைட்டாக… ஒரே சீராக முகத்தில் பூசினால் மேக்கப் அதிக நேரத்திற்கு அப்படியே இருக்கும்… கலையாது. பின்னர் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பிரஷ்ஷினால் பவுடரை பூசவும். எந்த இடத்திலும் அதிகம் படாமல் முகம் முழுவதும் ஒரே மாதிரியாக அப்ளை பண்ணவும்.
பின்பு, ஐப்ரோ பென்சிலால் புருவங்களை அடர்த்தியாக டச்சப் பண்ணவும். புருவத்தில் முடி இல்லாத இடத்தில் டச்சப் பண்ண வேண்டாம். அடுத்து, கண்களுக்கு மேலே புருவங்களுக்கு கீழே
மூடும் பகுதியை ஐஷடோ பூசவும். இந்த ஐஷடோவின் நிறம் நீங்கள் உடுத்தும் உடைக்குப் பொருத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும். அப்புறம், கண்களுக்கு மேலே, இமைகளுக்கு
அருகில் ஐ லைனரால் கண் மை போல் மெல் லிய கோடு வரையவும். இதனால் கண்கள் எடுப்பாகத் தெரியும்.
அதற்கடுத்து, கண் இமைகளை மஸ்கரா மூலம் அழகு படுத்தினால், பார்ப்பதற்கு இமைகள் அடர்த்தியாகத் தெரியும். இதனால் கண் கள் பளிச்சென்று இருக்கும். கன்னங்களை பளபளப்பாக மின்னவைக்க… ப்ளஸரை பிரஷ்ஷால் டச்சப் செய்யவும். அப்படி செய்வதால் முகத்திற்கு தகுந்தாற்போல் கன்னங்கள் எடுப்பாக இருக்கும்.
உதட்டில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக, லிப் லைனர் பென்சிலால் அவுட் லைன் வரைந்து கொண்டால் லிப்ஸ்டிக்கை அழகாக வரையலாம். இதனால் லிப்ஸ்டிக் வழியாது.
இறுதியாக நீங்கள் உதட்டில் வரைந்துள்ள அவுட் லைனுக்குள் லிப்ஸ்டிக் பூசினால் வெளியே கிளம்ப நீங்க ரெடி!