26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
08 1454917898 2 neem
தலைமுடி சிகிச்சை

எவ்வளவு முயற்சித்தும் உங்களால் பொடுகை போக்க முடியவில்லையா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

நாள்பட்ட பொடுகுத் தொல்லைக்கு காரணம், தலைச் சருமம் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது தான். ஒவ்வாமை என்னும் நிலை கூட இந்த நாள்பட்ட பொடுகு தொல்லைக் காரணமாக இருக்கலாம். தலையில் பொடுகு அதிகம் இருப்பின், அதனால் கடுமையான அரிப்பு மட்டுமின்றி, தலைமுடியின் மேல் வெள்ளையாக தூசி போன்று அசிங்கமாக இருக்கும்.

சரி, இப்போது நாள்பட்ட பொடுகைப் போக்க சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் தலையை சுத்தமாகவும், தலைமுடியை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை பொடுகுத் தொல்லைக்கு சிறந்த நிவாரணி. அதற்கு மூன்று எலுமிச்சையின் தோலை நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி குளிர வைத்து, அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் பொடுகைப் போக்கலாம்.

வேப்பிலை

பொடுகைப் போக்க வேப்பிலையை விட சிறந்த பொருள் வேறு எதுவும் இருக்க முடியாது. அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச, வேப்பிலையில் உள்ள மருத்துவ குணத்தால், ஸ்கால்ப்பில் உள்ள நோய்த்தொற்றுகள் நீங்கி, பொடுகு விரைவில் நீங்கும்.

கற்றாழை

கற்றாழையிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவை சருமத்திற்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் நல்லது. குறிப்பாக இதன் ஜெல்லை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, ஊற வைத்து அலச, பொடுகு நீங்குவதோடு, முடியின் வளர்ச்சியும் மேம்படும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவும் பொடுகை நீக்க உதவும். அதற்கு ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப்பை அலசி 5 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்படும்.

வெந்தயம்

வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, நீரில் நன்கு அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மையால் ஸ்கால்ப்பில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற்றப்பட்டு, பொடுகு நீங்கும்.

அஸ்பிரின்

அஸ்பிரின் மாத்திரை கூட பொடுகைப் போக்க உதவும். ஏனெனில் அதில் உள்ள சாலிசிலிக் அமிலம், பொடுகைப் போக்கவல்லது. அதற்கு 2 அஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து, ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதால் நிச்சயம் பொடுகைப் போக்கலாம்.

பீட்ரூட் மற்றும் இஞ்சி

பீட்ரூட் மற்றும் இஞ்சியை ஒன்றாக சேர்த்து அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

08 1454917898 2 neem

Related posts

கூந்தல் பராமரிப்பு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுருட்டை முடியை பராமரிப்பது எப்படி?

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகைப் போக்கும் கல் உப்பு!

nathan

முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!

nathan

நீங்கள் தூங்கும்போது செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள் கூந்தல் உதிர்விற்கு காரணம்!!

nathan

இயற்கை கலரிங்…

nathan

எண்ணெய் தேய்ச்சா கூந்தல் அடர்த்தியா வளருமா

nathan

பொடுகு தொல்லை நீங்க சில வழிகள்.

nathan