26.1 C
Chennai
Sunday, Aug 17, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பளிச்சென்ற முகத்திற்கு

1413271559அழகாய் தெரிய வேண்டும் என்பதற்காக, இளம் பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏராளம். திருமண விழாவிற்கு செல்லவோ, அல்லது அண்டை வீட்டுகாரரின் பிறந்தநாளுக்கு செல்வதற்கு கூட பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக இன்றைய பெண்கள் அழகு நிலையம் சென்று ப்ளீச்சிங் செய்து கொண்டு வருகின்றனர்.

ப்ளீச்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து முகம் பொலிவுடன் இருக்கும். ஆனால் இந்த ப்ளீச்சிங்கை இயற்கையான முறையில் வீட்டில் இருந்தபடியே எளிதாக செய்து கொள்ள சூப்பரான வழிகள் உள்ளன.

வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.

2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எனவே செயற்கை கீரிமைகளை விடுத்து இப்படி இயற்கையான ப்ளீச்சிங்கை வாரம் இருமுறை செய்து கொண்டால் ப்ளீச்சிங்கும் சுலபமாய் முடியும், நமது பணமும் மிச்சமாகும்.

Related posts

நம் பாதங்களை எவ்வாறு காத்துக்கொள்வது?

nathan

கருப்பா பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

முகம் முழுக்க ஒரே நிறமா இல்லாம சில இடத்துல வெள்ளையும், சில இடத்துல கருப்பும் இருக்கே என்ன செய்றது…

nathan

கொலாஜன் ஃபேஷியல்: collagen facial

nathan

தன்னம்பிக்கை தருது மேக்கப்,tamil beauty tips

nathan

ஃபேஸ் மாஸ்க்

nathan

முகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த இதை செய்யுங்கள்!….

sangika

நேபாள விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்! Video!

nathan

பெண்களுக்கு நாற்பது வயதில் இனிக்கும் தாம்பத்திய வாழ்க்கை

nathan